Home Tags World

Tag: World

26 முறை கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சிறுவன்

சிகாகோவில் முஸ்லீம் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தும் நில உரிமையாளன், ஒரு முஸ்லீம் குடும்பத்தின் குடியிருப்பில் நுழைந்து, கத்தியால் தாக்கி, தாயைக் காயப்படுத்தி, அவரது 6 வயது மகன் வாடியா அல்-யைக் கொன்றுள்ளான். அவர் சில வாரங்களுக்கு முன்பு, தனது ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, 71 வயதான குற்றவாளியால் வாடியா 26 முறை கத்தியால் குத்தப்பட்டார், அவர் இப்போது இரண்டு வெறுப்பு குற்ற வழக்குகளை எதிர்கொள்கிறார், ரெஹாப் கூறினார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் பற்றிய செய்திகளைக் கேட்ட பின்னர் கொலையாளி தாக்குதலை நடத்த தூண்டியதாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்

சட்டவரைபுகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆழ்ந்த கவலை

இலங்கை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டவரைபுகள், சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (12) அன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் ரவிணா ஷம்தாசனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இலங்கையில் மனித உரிமைகள் பதுகாப்பு தொடர்பில் தமது அச்சம் மற்றும் ஏமாற்றத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார். “இலங்கை நாடாளுமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் இரண்டு சட்டவரைபுகள்-பயங்கரவாதத்திற்கு எதிராக திருத்தப்பட்ட சட்டம் மற்றும் இணையதள பாதுகாப்பு-அதிகாரிகளுக்கு பரந்துபட்டளவில் மிகவும் கூடிய அதிகாரங்களை அளிக்கிறது மேலும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு முரணாக, மனித உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்பது குறித்து எமக்கு ஆழ்ந்த கவலைகள் உள்ளன”. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டவரைவு மிகவும் சர்ச்சைக்குரியதும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியும், சிறுபான்மையினர் மீது ஒரு ஒடுக்குமுறைக்கான ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரவுள்ளது. மேலும் […]

இஸ்ரேலில் காணாமல்போன இலங்கைப் பெண் சடலமாக மீட்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே ஏற்பட்டுள்ள போர் தற்போது உக்கிரமடைந்துள்ள நிலையில் குறித்த யுத்தத்தில் படுகாயமடைந்திருந்த இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளார். போரின் போது காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குறித்த பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த அனுலா ஜயதிலக்க என்ற இலங்கைப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலில் உயிரிழந்த குறித்த பெண் அங்குள்ள வயதான பார்வையற்ற பெண்ணை பராமரித்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அனுலா ஜயதிலக்க சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர்கள் முகநூலில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அனுலா எனது மறைந்த அத்தை அலிசாவின் பராமரிப்பாளராக இருந்தார். அர்ப்பணிப்பு மற்றும் அன்பான இதயத்துடன், வீட்டில் உள்ள பூனைகளையும், அநேகமாக பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் கவனித்துக்கொண்டுள்ளார். என் அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் கிப்புட்ஸ் பீரியில் தொடர்ந்து வசித்து வந்தார். இந்நிலையில் 2 நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் […]

கருத்தடை சாதனம் சரியாக பொருத்தாததால் இளம்பெண் ஒருவரின் இதயம் வரை சென்ற அவலம்

இளம்பெண் ஒருவரின் கையில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனம், நழுவி இதயத்துக்குள் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவுஸ்திரேலியாவில், 22 வயதாகும் க்ளோயி வெஸ்டர்வே என்ற இளம்பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கையில் கருத்தடை சாதனம் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு அவருக்கு வாந்தி, நெஞ்செரிச்சல், அதிகப்படியான ரத்தப்போக்கு, படபடப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவர் மருத்துவமனைக்குச் சென்று, அந்த கருத்தடை (ஹார்மோன் சுரப்பிகளை தூண்டும் கருவி) அகற்றிக்கொள்ள முடிவு செய்தார். அதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அவரது கையில் பொருத்தப்பட்டிருந்த கருத்தடை சாதனம் பொருத்திய இடத்தில் காணவில்லை. தேடிப்பார்த்த மருத்துவர்கள், அப்பெண்ணின் இதயத்தை உறையவைக்கும் ஒரு செய்தியை சொன்னார்கள். அதாவது, கருத்தடை சாதனம் உடலில் சரியாக பொருத்தப்படாததால், அது நழுவி உடலின் வேறு இடத்துக்குச் சென்றிருக்கலாம் என்றும், இப்போது அதனை அகற்ற வேண்டும் என்றால் மிகப்பெரிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் […]

கனடா ஆசையா!! 70வயது பாட்டியை பேஸ்புக்கில் காதலித்து கலியாணம் கட்டிய 35 வயது இளைஞன்!

பாகிஸ்தானை சேர்ந்த 35 வயதான இளைஞன் ஒருவர் தன்னைவிட இரண்டு மடங்கு வயதான -70 வயதான- கனடா மூதாட்டி ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பாகிஸ்தானின் குஜராதை சேர்ந்த நயீம் ஷாஜாத் என்ற இளைஞன், கனடா பாட்டியுடன் பேஸ்புக் மூலம் காதலை வளர்த்துள்ளார். பேஸ்புக்கில் சாதாரணமாக நண்பர்களாகி, பேஸ்புக் காதலர்களாகி, தற்போது தம்பதியர்களாகி விட்டனர். 20117ம் ஆண்டு இருவரும் பேஸ்புக்கில் அறிமுகமானார்கள். விரைவில், தமக்கிடையில் ஏற்பட்பட்டுள்ளது தெய்வீக காதல் என்பனை உணர்ந்து, வயது மரபுகளை மீறி, அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கணிசமான வயது வித்தியாசம் இருந்தபோதிலும், நயீமின் அசைக்க முடியாத காதல், அவரது மனதைக் கவர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வழிவகுத்தது. நயீமுடன் திருமணம் செய்து கொள்வதற்காக கனடா மூதாட்டி பாகிஸ்தானுக்கு வந்தார். நயீமின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் எதிர்த்ததாகவும், நயீம் காதலில் உறுதியாக இருந்ததையடுத்து, திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் தெரியவருகின்றது. இதே வேளை, கனடாவுக்கு குடிபெயர்வதற்காக நயீம் […]