Home Tags Mannar

Tag: mannar

மன்னாரில் மீனவர் ஒருவரை கட்டி வைத்து கொடூர தாக்குதல்

மன்னார் கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து கொடூரமாக தாக்கி காணொளி காட்சி பதிவு செய்த நிலையில் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை (23-10-2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குறித்த சம்பவத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. சம்பவ தினமான திங்கட்கிழமை அதிகாலை விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் குறித்த மீனவர் சென்று அட்டையை பிடித்ததாக கூறி அவரை இருவர் பிடித்து கட்டி கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து காணொளி பதிவு செய்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மீனவரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை பொலிஸாரின் கவனத்துக்கு […]

நிர்வாண புகைப்படங்களை காட்டி 17 வயது சிறுமியை மிரட்டி துஸ்பிரயோகம் – மூவர் கைது

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கிராமம் ஒன்றில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் மூன்று நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த மூவரும் மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் பெரிய கமம் பகுதியை சேர்ந்த 23,18,17 வயதுடைய இளைஞர்கள் மூவரே மேற்படி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மூன்று நபர்களும் சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்ததோடு அப் புகைப்படத்தை நண்பர்களிடமும் பரிமாறி கொண்டுள்ளனர். அப் புகைபடங்களை வைத்து சிறுமியை மிரட்டி துஷ்பிரயோக சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என பொலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரம் சம்பவத்தின் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் வாகன திருத்தகம் ஒன்றில் பணிபுரியும் 23 வயதுடைய நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததுடன் அவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் வலுக்கட்டாயமாக அபகரித்து சென்றுள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் தாயார் மன்னார் பொலிஸ் […]

நோயாளர் காவு வண்டியில் போதைப்பொருள் கடத்தியபோது பொலிசாரை கடித்து விட்டு தப்பிய சாரதி தமிழகத்தில் கைது

ஐஸ் போதைப்பொருளை நோயாளர் காவு வண்டியில் கடத்தி விற்பனை செய்தபோது, மன்னார் பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கட்டை விரலை கடித்து விட்டு தப்பிய நோயாளர் காவு வண்டி சாரதி கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இன்று (7) காலை பாம்பன் குந்துகால் கடற்கரை அருகில் வைத்து மரைன் பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரை அருகே நேற்று இரவு இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்திய படகில் வந்து இறங்கிய இலங்கை நபரைர் தொர்பில், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சந்தேகத்தின் பெயரில் மண்டபம் மரைன் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மரைன் போலிஸார் இலங்கை நபரை பிடித்து மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியை சேர்ந்த தேவராஜன் (43) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த 1990 […]

3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தல் உடன் தொடர்பு பட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

மன்னாரை சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் குளிக்க சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவர் குளியலறையில் வழுக்கி விழுந்து மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.