Home Tags Local

Tag: local

கற்பூரத்தால் நேர்ந்த விபரீதம்!! 6 பேர் கவலைக்கிடம்.. 16பேர் வைத்தியாசலையில்

கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்கு தெருவில் உள்ள 8 மாடி கட்டடிமொன்றில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 7 தீயனைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ […]

பிக்குவை தாக்கி, 48 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்து தப்பிச்சென்ற நபர் கைது.

சிலாபத்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பிக்கு ஒருவரை தாக்கிய சிலாபம், உட்லண்ட் வத்த பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 21 ஆம் திகதி சிலாபம் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு குறித்த நபர் சென்று பொருட்களை கொள்வனவு செய்த போது, தனது கையடக்க தொலைபேசியில் காட்சிகள் சிலவற்றை பதிவு செய்ய முயன்றுள்ளார். அதற்கு அங்கிருந்த பிக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது, ​​குறித்த நபர் அவரைத் தாக்கி, பிக்குவின் பையில் இருந்த 12,000 யூரோக்கள் உள்ளிட்ட 48 இலட்சம் ரூபா பணத்தை அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், இந்த சம்பவத்திற்கு முகங்கொடுத்த பிக்கு பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது, ​​போலியான இராணுவ பயிற்சி சான்றிதழ், இராணுவத்தினர் பயன்படுத்திய சில ஆடைகள் மற்றும் 2 பொம்மை […]

கிணற்றில் வீழ்ந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான சோகம்

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவித சாரமித் (6) தாயான லக்மாலி வீரசிங்க (37) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி பலி

ஹோமாகமவில் பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனாகொட சமகி மாவத்தையில் வசித்து வந்த சமன்மாலி என்ற 11 வயது மாணவிக்கே இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி தனது மைத்துனியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் பாம்பு கடித்துள்ளது. பின்னர் அவருடைய தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வரை தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் பாம்பு கடித்ததை அறியாமல் குழந்தைக்கு இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார். அப்போது சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் […]

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் தோணியில் சென்ற இரு இளைஞர்கள் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மட்டக்களப்பு நகர சபைக்கு உட்பட்ட நாலவடியில் உள்ள வாவியொன்றில் நடந்துள்ளது. மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதான த.கிருசாந்த் மற்றும் 18 வயதான பி.பிருஜனன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் ஏனைய இருவரும் வாவிக்குள் தோணியில் சென்று ரிக்-ரொக் செய்துவிட்டுக் கரைக்குக் திரும்பியபோதே தோணி கவிழ்ந்துள்ளது. நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் அந்தப் பகுதி மக்களால் காப்பற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தப் பகுதி மீனவர்களும், பொலிஸாரும் இணைந்து மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ரிக்-ரொக்கில் பிரபல்யம் அடைவதற்காக ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.