Home Tags Crime

Tag: crime

பயணிகளை இடைநடுவில் தவிக்கவிட்டு போதைப்பொருள் உட்கொள்ளச் சென்ற சாரதி

பூகொடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தை தெல்கொட பகுதியில் பயணிகளுடன் நிறுத்திவிட்டு சாரதி போதைப்பொருள் உட்கொண்ட சம்பவம் தொடர்பில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த பேருந்தின் ஓட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கம்பஹா மாவட்ட முகாமையாளர் திலக் வீரசிங்க தெரிவித்தார். காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சாரதி போதைப்பொருள் உட்கொண்டதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் பயணிகளுடன் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்திற்குள் புகுந்து பெண் மீது கத்தி குத்து – சந்தேக நபர் தப்பியோட்டம்

ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்ற பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். படுகாயமடைந்த பெண் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார். தனது வீட்டில் இருந்து ஐந்து பவுண் தங்கப் நகைகளை காணவில்லை என தனது சகோதரன் சந்தேகிப்பதாக பெண் பாதுக்க பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளார். வீட்டுக்குச் செல்வதற்காக நீதிமன்றத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல முற்பட்ட போது முச்சக்கரவண்டியில் வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பூகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

காதலி வெட்டிக்கொலை! காதலன் குத்திக்கொலை!! – மொனராகலையில் பயங்கரம்.

ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் காதலர்கள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுள்ளை பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமை 22 வயதுடைய எஸ்.சதுரிகா என்ற யுவதி கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை 24 வயதுடைய ஆர்.குமாரசிறி என்ற இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். யுவதியின் முன்னாள் காதலன் தலைமையிலான குழுவினர் இந்தக் கொலைகளைச் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் காதலன் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய இளைஞர் அப்பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிகாரி துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் அதிகாரி பிரியங்க சில்வா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். தலையின் வலது பக்கத்தில் ரத்தக் காயம் இருப்பதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயமாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். நாற்பத்திரண்டாவது வயதில் உயிரிழந்த இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் காலை அஹலியகொட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்தார்.

மகளுடன் காதல் உறவை பேணிய நபரை குத்தி கொன்ற தந்தை

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தோட்டை – நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று (18) காலை இக்கொலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக ஏற்பட்ட தகராறால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது