Home Tags Accident

Tag: accident

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை கார் ஏற்றி கொன்ற மனைவி, கள்ள காதலனோடு மாட்டினார்

விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. […]

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி விபத்தில் பலி !

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவ சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) இரவு 7.00 மணியளவில் தலாவ நகரின் மையப் பகுதியில் உள்ள சுற்றுவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தலாவ கரகஹவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 10 வயதுடைய டபிள்யூ. நிசல்யா நெத்சரணி விமலசேன என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். இவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு முகம்கொடுக்கவிருந்த மாணவி எனவும் தெரியவந்துள்ளது. கொழும்பு சபுகஸ்கந்த பகுதியில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த எரிபொருள் ஏற்றிச் சென்ற பௌசர் ஒன்று தலாவ நகர சுற்றுவட்டத்தில் தெற்கிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோட்டார் சைக்கிளில் உயிரிழந்த சிறுமியும் அவரது தாயும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிள் பௌசரில் மோதியதும், குறித்த சிறுமி பௌசர் வாகனத்தின் சில்லில் சிக்கி படுகாயமடைந்திருந்த நிலையில் இருவரும் […]

விடுமுறைக்காக வீடு சென்றிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

தம்புள்ளையில் இடம்பெற்ற விபத்தில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சமூக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தம்புள்ளையைச் சேர்ந்த சாந்திமா ரணசிங்க (வயது- 24) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்காக நேற்று முன்தினம் வீடு சென்றிருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இவ் விபத்து சம்பவம் நேற்று (10) 11.00 மணியளவில் கலேவல தலகிரியாகம விகாரைக்கு எதிராக இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தில் படுகாயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 8:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.