Tag: ஹெரோயின்
வாழைப்பழங்களுக்குள் மறைத்து சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட ஹெரோயின்! – படங்கள்
களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளை பார்வையிட வந்த நபர் ஒருவரால் வாழைப்பழ சீப்புக்குள் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். வாழைப்பழங்களினுள், 3 மற்றும் 4 அங்குல அளவுள்ள 16 உரிஞ்சு (ஸ்ட்ரோ) குழாய்களுக்குள் ஹெரோயின் போதைப்பொருளை இட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குறி்ப்பிட்டுள்ளார். சந்தேகநபர் கொண்டு வந்த உணவுகளை சிறைச்சாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் சோதனை செய்த போது குறித்த வாழைப்பழ சீப்பினுள் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, போதைப்பொருளை கொண்டு வந்த நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்தார். அத்துடன், சம்பவம் தொடர்பில் களுத்துறை சிறைச்சாலை அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஹெரோயின், வாள்களுடன் நடமாடியவர் கைது – நெல்லியடியில் சம்பவம்
நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். நேற்று மாலை அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடமிருந்து 3 கிராம் 80 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 3 வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். இன்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் கூறினர்.
யாழில் ஹெரோயின் வைத்திருந்த பொலிஸ்காரனுக்கும் 29 வயது யுவதிக்கும் நடந்த கதி!!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் அரியாலை பகுதியில் 130 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாவட்ட குற்ற தடுப்பு...
மட்டக்களப்பில் 8 நாட்களில் கஞ்சா, ஜஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது
மட்டக்களப்பு - கொக்குவில், ஏறாவூர் காவல்துறை பிரிவில் கடந்த 8 நாட்களில் போதைப்பொருட்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக மட்டக்களப்பில் நியமிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு விசேட காவல்துறை குழுவினரால்...
யாழில் வைத்தியரின் காரிலிருந்து ஹெரோயின் மீட்பு! இருவர் கைது!!
யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் மருத்துவர் என்பதைக் குறிக்கும் அடையாளம் பொறிக்கப்பட்ட காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது என்று கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சந்தேகத்தில்...