Home Tags வைத்தியசாலை

Tag: வைத்தியசாலை

பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர்ந்த ஆண்களும் வாசிக்காதீர்கள்…. இந்தப் பதிவில் பெயர்கள் மாற்றபட்டு கொஞ்சம் கற்பனையும் சொருகப்பட்டுள்ளதே தவிர சம்பவம் உண்மையானது. நீதன் என்ர நண்பன். திருமணம் முடித்து சாதாரண அரச அலுவராக பிள்ளைகளுடன் வாழ்கின்றான். அவனுக்கு எந்தவித கள்ளக்காதல்களோ அல்லது கள்ளத் தொடர்புகளோ அல்லது விபச்சாரிகளின் தொடர்புகளோ இல்லை. அப்படியான செயற்பாடுகளை செய்வதற்கு கனவிலும் நினைக்காதவன். மனைவியும் ஒரு அரச உத்தியோகத்தர். அவனுடனேயே அவனது வயதான தாய் பார்வதியும் இருக்கின்றார். அவனது 78 வயதுத் தாய் பார்வதிக்கு சில மாதங்களாக முழங்காலுக்கு கீழே தொடர்ச்சியாக சரியான கொதி வலி…. அரச ஆசுப்பத்திரிக்கு கொண்டு சென்று மருந்து எடுத்தும் பலனில்லை. இரவில் தாய் ஒரே முனுமுனுப்பு. ”இவனைப் பெத்து என்ன பலன்… எனர கால் கொதி வலிக்கு சரியான இடத்தில கொண்டு போய் […]

வைத்தியசாலை ஆய்வுகூட உத்தியோகஸ்தருடன் பாலியல் அத்துமீறல்!

அரச வைத்தியசாலையொன்றில் கடமையாற்றும் பொது சுகாதார ஆய்வுகூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பொது சுகாதார ஆய்வு கூட தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நிட்டம்புவ தலைமையக பொலிஸாரால் நேற்று (6) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஐம்பத்தைந்து வயதுடையவர். விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையிலும், முப்பது வயதான ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அப்பகுதியின் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பற்றி எரியும் திருமலை தம்பலகாமம் வைத்தியசாலை

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று காலை (01) தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது. வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகளே தீப்பற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காலை ஆறு மணி அளவில் சத்தமொன்று கேட்டதாகவும் பின்னர் தீப்பற்றியதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். வைத்திய சாலையில் நோயாளர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் தெரிய வருகின்றது இருந்தும் தீப்பற்றியமைக்காண காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் சிசு இறந்த நிலையில் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை – கிளிநொச்சியில் சம்பவம்

பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27.06.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இது மருத்துவர்களின் தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று ( 26.09.2023) முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

ஊசியால் பல்கலைக்கழக மாணவன் மரணம்: மறுக்கும் வைத்தியசாலை

காலியில் தடுப்பூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம் திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம் இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். ஊசியை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மஹரகம வைத்தியசாலையிடம் வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்