Tag: வைத்தியசாலையில்
தோழியுடன் உறவு கொள்ள மறுத்த காதலனின் மர்ம உறுப்பை வெட்டிய காதலி – வைத்தியசாலையில் சேர்த்த மனைவி..
தற்போது ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சி அளிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று நடந்துள்ளது எனலாம். உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சௌபேபூர் என்ற கிராமத்தில் தான் அந்த சம்பவம் பதிவாகி உள்ளது. ஒரு பெண் தனது காதலனை தனது வீட்டிற்கு வரவழைத்து, தனது தோழியுடன் உடல் உறவில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். அந்த காதலன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அந்த பெண் காதலியின் ஆணுறுப்பை வெட்டி உள்ளார். சௌபேபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. தோழியுடன் உடலுறவு கொள்ள மறுப்பு இந்த சம்பவம் குறித்து அந்த காவல் நிலையத்தின் அதிகாரி கூறுகையில், “ஒரு இளைஞர் தனது காதலியை சந்திக்க இரவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த காதலி தனது தோழி ஒருவரையும் அவரது வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார். இந்நிலையில், தனது தோழியுடன் உடலுறவு கொள்ளுமாறு காதலனை அந்த காதலி வற்புறுத்தி உள்ளார். தொடர்ந்து அழுத்தம் […]
யாழ்.போதனா வைத்தியசாலையில் பொதுமகன் மீது பாதுகாப்பு ஊழியர்கள் தாக்குதல்! 3 பேர் கைது
யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது. யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோப் பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம் என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ? மனிதரா மிருகமா பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு யார் இந்த தைரியத்தை வழங்கியது ?? பொதுமக்கள் சொல்வது கேட்கவில்லையானால் அடிப்பதற்கு யார் அனுமதி வழங்கியது ? இப்போது நடைபெற்ற செயற்பாடு உடனடி நடவடிக்கைக்காக ( மருத்துவபீட மாணவி தொலைபேசியில் வீடியோ எடுத்த போது அந்த பாதுகாப்பு பிரிவினரால் தொலைபேசி பறிக்கப்பட்டது ) போதனா வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கபட்டிருக்கும் தனது உறவுக்கு சாப்பாடு கொண்டு சென்ற போது தாக்குதலுக்குள்ளாக மனிதனுக்கு நியாயம் கிடைக்குமா?? யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீண்டும் ஒரு தடவை ஊழியர்கள் தொலைபேசி பாவிக்க தடை என அறிக்கை விட்டு தன்னைத் தானே தேற்றிக் கொள்வார் தாக்குதலுக்கு உள்ளானவர் பொலிசாரிம் முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு […]
அதிகாலையில் இடம்பெற்ற பஸ் விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் பயணித்தவர்களாவர். மேலும், இந்த விபத்தால் அந்த குறித்த வீதியில் அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இலவச கண்புரை சத்திர சிகிச்சை: நோயாளர்களுக்கு அழைப்பு
யாழ்.மாவட்டத்தில் கண்புரை (Cataract) சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திர சிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களுக்கான சத்திரசிகிச்சைகள் கண்சத்திர சிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி மலரவன் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும் கண்புரை சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நோயாளர்களைத் தெரிவு செய்யும் இலவச கண்பரிசோதனை முகாம் எதிர்வரும் (23.09.2023) ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (இந்து விடுதி) இடம்பெறவுள்ளது. அதேபோன்று நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களைத் தெரிவுசெய்யும் இலவச மருத்துவ முகாம் எதிர்வரும் (23.09.2023)ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் அரியாலை நாவலடி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறவுள்ளது. குறித்த முகாமில் கண்புரை சத்திரசிகிச்சைக்குத் தெரிவு செய்யப்படும் நோயாளர்களுக்கான சத்திரசிகிச்சை […]