Home Tags விபத்து

Tag: விபத்து

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை – பிபில பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 6.00 மணியளவில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கோர விபத்து!! இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பலி-ஆறு பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது. மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் விபத்து : குடும்பஸ்தர் படுகாயம் – இளைஞர்கள் தலைமறைவு

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாலமுனையைச்சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (29/09/2923) பிற்பகல் 06:30 மணியளவில் காத்தான்குடி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் சந்தியில் நிகழுந்துள்ளது. வேகமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த இரு இளைஞர்கள் வேகக்கட்டுப்பாட்டை மீறி, குடும்பஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தரின் கால்களில் ஏற்பட்ட முறிவு காரணமாக காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தினை ஏற்படுத்திய இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளனர். விபத்துக்குள்ளான இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் காத்தான்குடி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் பொலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதுடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்து விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய இளைஞர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதிகாலையில் இடம்பெற்ற பஸ் விபத்து; 15 பேர் வைத்தியசாலையில்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று (25) காலை இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயமடைந்து வரக்காபொல மற்றும் வதுப்பிட்டிவல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தின் பயணித்தவர்களாவர். மேலும், இந்த விபத்தால் அந்த குறித்த வீதியில் அதிகாலை ஐந்து மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.