Home Tags விடுத்துள்ள

Tag: விடுத்துள்ள

யாழ் போதனா மருத்துவமனையில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ் போதனா மருத்தவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப நீதிமன்று கட்டளை பிறப்பித்தது. காய்ச்சல் காரணமாக யாழ் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் இடதுகையின் மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்டது. சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு விடுதியில் கடமையில் இருந்தவர்களின் அலட்சியமும், தவறுமே காரணம் என்று சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், சிறுமியின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீட விசேட உடற்கூற்று நிபுணர் ஒருவர் ஊடாக உடற் கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸார் கோரியமைக்கு அமைய நீதிமன்றம் கட்டளையிட்டது. பெயர் குறிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட […]

அகற்றப்பட்ட சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுக்கு கீழ் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது. விசாரணைகள் இன்னமும் முடிவடையாத நிலையில், விசாரணைகளுக்கு இன்னமும் 10 நாள்கள் தேவை என்று நேற்றைய வழக்கு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை கொழும்புக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ளவும், கை அகற்றப்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறியவும் நீதிமன்று உத்தரவிட்டது. சிறுமியின் கை பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையில் பொலிஸார் ஊடாகக் கையளிக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையை முழுமைப்படுத்திச் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது. சிறுமியின் சார்பாக […]

30 நாட்களாக மகனை காணவில்லை! பெற்றோர் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள்

பதுளை, பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை...

யாழ். மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகம் அதிகரிக்கின்றமையால் அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118....

விபத்தில் சாரதி உயிரிழந்ததையடுத்து கொடூரமாக தாக்கப்பட்ட பெண்! பொது மக்களுக்கு அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை

சட்டத்தை கையில் எடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்காது அவர்களை தண்டிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்...