Tag: வந்த
கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு காதலனுக்கு செய்த துரோகம்.. 25 கோடி சொத்தை இழந்து நடுரோட்டிற்கு வந்த நடிகை
இரண்டு திருமணம் செய்து கொண்டாலும் அதன் பிறகு கல்யாணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாத உச்ச நடிகருடன் பிரபல நடிகை ஒருவர் 13 வருடங்களாக ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தார். சில காலமாக இவர்கள் இருவரும் தொடர்ந்து இணைந்த படங்களில் நடித்து வந்தவர். அதன் பின்பு அந்த உச்ச நடிகர் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவரை விட்டு பிரிவதாகவும் அறிவித்தார். நடிகை தன்னுடைய மகளின் எதிர்காலத்தின் நன்மைக்காகத்தான் பிரிகிறேன் என்றும் விளக்கம் அளித்தார். அதன் பின்பு தனிமையில் இருந்த அந்த நடிகைக்கு அரசியல் பெரும் புள்ளியுடன் அறிமுகம் கிடைத்தது. கொஞ்ச நாட்களில் இவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதல் மலர்ந்தது. இந்தக் கள்ள உறவுக்கு ஆசைப்பட்டு தான் அந்த உச்ச நடிகருடன் இருந்த லிவிங் ரிலேஷன்ஷிப்பை நடிகை துண்டித்திருக்கிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்! உச்ச நடிகருக்கு செய்த துரோகம் தான் நடிகையின் 25 கோடி அம்பேலானது. நடிகை தன்னுடைய சொத்து சம்பந்தப்பட்ட […]
மோட்டர் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 பிரதேசங்களில் மோட்டர் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வந்த இருவரை நேற்று புதன்கிழமை (4) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த மாதம் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர் மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில் பெண்களை மோட்டார்சைகிளில் இருவர் பின் தொடர்ந்து தங்க சங்கிலிகளை அறுத்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்த பிரதேசங்களை சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், நேற்று புதுன்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொலிஸார் கொள்ளையர்கள் இருவரையும் செட்டிபாளையம் கோவில் அருகில் சுற்றிவளைத்து மடக்கிபிடித்து கைது செய்தனர். அத்துடன், கொள்ளையிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளனர். இருவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிகரெட் புகைத்தால் வந்த மோதல். ரயில் சேவையும் பாதிப்பு
தெமட்டகொடை தலைமை பொறியியலாளர் தலைமையகத்திற்குள் சிகரெட் புகைத்தவாறு பிரவேசித்த புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மற்றும் புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இருவரும் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான வாயிலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் சாதாரண உடையில் சிகரெட் புகைப்பதை பார்த்து அந்த நபரிடம் புகைபிடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். இதன்போது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நபர், தான் ரயில்வே உப கட்டுப்பாட்டாளர் எனக்கூறி அவரது அடையாளத்தை வெளிப்படுத்த தனது அடையாள அட்டையை புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் முகத்தில் வீசியுள்ளார். புகையிரத பாதுகாப்பு சார்ஜன்ட் தாக்கப்பட்டதை பல ஊழியர்கள் பார்த்தபோது, சார்ஜென்ட்டை தாக்கிய நபரை உடனடியாக பிடித்து அவரையும் தாக்கியுள்ளனர். புகையிரத பாதுகாப்பு சார்ஜன்டை தாக்கியதாக கூறப்படும் உப கட்டுப்பாட்டாளர் அப்போது சீருடை அணிந்திருக்கவில்லை என திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இந்த ரயில்வே […]
மலையகத்தில் திரிபோஷாவை பெற்றுகொள்ள வந்த கர்ப்பிணி தாய்மாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
கண்டி – அதரலியத்த பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட திரிபோஷக்கள் காணாமல்போனமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் அதரலியத்த பொலிஸாரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கர்ப்பிணித் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு சுகாதார அமைச்சினால் இந்த திரிபோஷாக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை ஊழியர்கள் சுமார் 10 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சேனக தலகலவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த திரிபோஷா திருட்டுக்கு மருத்துவமனை ஊழியர்களில் ஒருவர் அல்லது பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. தாய்மார்கள் திரிபோஷாவை பெற்றுக் கொள்ள வந்த போது திரிபோஷா கையிருப்பில் இருக்கவில்லை. இதனையடுத்தே அவை காணாமல் போனமை தெரியவந்துள்ளது. திரிபோஷாவை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் வெளிநபர் ஒருவர் நுழைந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை […]
திருமணத்திற்கு முன் விடுதியில் தங்கிய காதலர்கள்!! காதலிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பின்னர் நேர்ந்த விபரீதம்
நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தியதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி காதலனால் படுகாயமடைந்த 29 வயதான காதலி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இருவரும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் காதலன் என கூறப்படும் இளைஞன் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது காதலியின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு முன்னதாக வந்த அழைப்பு ஒன்றின் எண்ணை காதலன் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து காதலன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.