Tag: மூலம்
தவறான முறையில் கனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு
தவறான முறையில் ஹனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு மருத்துவக் கவனயீனம் (medical negligence) என்றால் என்ன? அண்மித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை முன்னிறுத்திய ஓர் பகிர்வு. பாணதுறை வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கு மெனிக்னைஸ் என்ற ஒரு நோயிற்காக ஹனுலா மூலம் அன்ரிபயற்றிக் ஏற்ற முற்பட்டபொழுது அது நாளத்தில் சேர்க்கப்படாமல் நாடியில் சேர்க்கப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் இரத்தக் கட்டி ஏற்பட்டு அதன் விளைவின் காரணமாக குழந்தையின் மணிக்கட்டுப்பகுதியோடு கை அகற்றப்பட்டது. இவ்வழக்கில் விசேட நட்டமாக 3.5 மில்லியன் ரூபாவும் மருத்துவப் பதிப்பிற்காக 5 இலட்சமும் என மொத்தமாக 4 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கவேண்டும் என மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.
போலி சான்றிதழ் மூலம் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணியாற்றிவர் கைது; சான்றிதழ் தயாரித்தவரும் கைது
க.பொ.த. உயர்தரப் பரீட்சை போலி பெறுப்பேற்றுச் சான்றிதழைச் சமர்ப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகக் கடமையாற்றிய ஒருவர் யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்குப் போலிச் சான்றிதழ்களைத் தயாரித்துக் கொடுத்த குற்றச்சாட்டில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியர் சேவை பதவிநிலை உயர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் பரீட்சைத் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டபோதே, சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணநிரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு சந்தேகநபரைக் கைது செய்துள்ளது. சந்தேகநபர் முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இவர் இராணுவ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் சில வருடங்கள் கடமையாற்றிய பின்னர், மாகாணக் கல்வி அமைச்சால் தொண்டர் ஆசிரியராக இணைக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவை தரம் 3இல் உள்ளீர்க்கும்போது இவருக்கும் ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் 3 […]
ஒன்லைன் மூலம் இனி இவற்றை செய்தால் தண்டனைக்குரிய குற்றம்
ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானி மூலம் வெளியிட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு சமர்ப்பிப்பதற்கு பொது பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
யாழ்.கோப்பாயில் அளவுக்கு அதிகமான போதைப் பொருளை ஊசி மூலம் ஏற்றிய இளைஞன் பலி! அவருக்கு போதை ஊசி ஏற்றிய...
ஊசி மூலம் அளவுக்கதிகமான போதைப் பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் உயிரிழந்த நிலையில் குறித்த இளைஞனுடன் போதைப் பொருளை எடுத்துக்கொண்ட மேலும் 3 இளைஞர்களை பொலிஸார் தேடிவரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
யாழ்.கோப்பாய் பொலிஸ்...
முல்லைத்தீவில் கருக்கலைப்பு மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்கள் மீட்பு? (படங்கள்)
முல்லைத்தீவு- துணுக்காய் ஐயங்குளம் பகுதியில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
கால்நடை மேய்ப்பாளர்கள் வழங்கிய தகவலுக்கமைய நேற்று முந்தினம் (23:12:22) குறித்த இடத்திலிருந்து எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை...