Home Tags மருந்து

Tag: மருந்து

போலி மருந்து இறக்குமதி!! மூவரிற்கு தடை

போலி ஆவணங்களை தயாரித்து தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் அதன் நிறுவன உரிமையாளருக்கும், அதற்கு அனுமதி வழங்கிய அரச உயர் அதிகாரிகள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மனுவொன்றின் ஊடாக முன்வைத்த சர்ப்பணங்களை அடுத்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, நிறுவனத்தின் உரிமையாளரான ‘அருண தீப்தி’ என அழைக்கப்படும் சுகத் ஜானக பெர்னாண்டோ, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகர, சுகாதார அமைச்சின் விநியோக பணிப்பாளர் வைத்தியர் கபில விக்கிரமநாயக்க ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களை தயாரித்து 22,500 இம்யூனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தி ஊசி மருந்து குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மருந்து நிறுவனம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்தி வருகிறது. இதன்போது […]

7 ஆம் வகுப்பு மாணவிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர் கைது

மொனராகலை – தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 07 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் புதன்கிழமை (18) ஆம் திகதி கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியரின் மேலதிக வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (08)ஆ ம் திகதி ஆசிரியர், மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியுள்ளார். தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில் மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பொலிஸாரால் கைது […]

குளத்தில் வீசப்பட்டிருந்த மருந்து குப்பிகள்!! சம்பவத்துடன் தொடர்புடைய வியாபாரி கைது

பொது சுகாதார சேவைக்கு அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கெக்கிராவ தெலம்பியகம குளத்தில் கொண்டு வீசப்பட்டிருந்த அரச முத்திரை பதிக்கப்பட்ட பல்வேறுபட்ட 5,000 மருந்து குப்பிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு மணி நேரத்திற்குள் அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு குறித்த வியாபாரியை கைது செய்ய முடிந்துள்ளதாக கெக்கிராவ பொது சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். கெக்கிராவ பொது சுகாதார வைத்திய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய உடனடியாக செயற்பட்ட குறித்த பிரிவின் வைத்திய அதிகாரி அசித கெளசல்ய தனிப்புலி ஆராச்சி உள்ளிட்ட குழுவினர் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதனூடாக கெக்கிராவ நகருக்கு அருகாமையிலுள்ள தெலம்பியகம குளத்தில் சுகாதார பிரிவினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பாதுகாப்பற்ற வகையில் வீசப்பட்டிருந்த அரச முத்திரை பொறிக்கப்பட்ட பாவிக்கப்பட்ட 5,000 மருந்து குப்பிகளை சுகாதார பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய வியாபாரி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னரும் அப்பிரதேசத்தில் […]

யாழில் பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார்

யாழ் – வடமாராட்சி வெற்றிலைக்கேணி பகுதியில் இளைஞன் ஒருவன் தனது தவறான முடிவினால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (07.10.2023) மதியம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் 24 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறான முறையில் கனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு

தவறான முறையில் ஹனுலா மூலம் மருந்து ஏற்றியதால் கை அகற்றப்பட்ட குழந்தைக்கு 4 மில்லியன் நட்டஈடு மருத்துவக் கவனயீனம் (medical negligence) என்றால் என்ன? அண்மித்த உயர் நீதிமன்ற தீர்ப்புக்களை முன்னிறுத்திய ஓர் பகிர்வு. பாணதுறை வைத்தியசாலையில் குழந்தை ஒன்றுக்கு மெனிக்னைஸ் என்ற ஒரு நோயிற்காக ஹனுலா மூலம் அன்ரிபயற்றிக் ஏற்ற முற்பட்டபொழுது அது நாளத்தில் சேர்க்கப்படாமல் நாடியில் சேர்க்கப்பட்டதன் காரணமாக அந்தப் பகுதியில் இரத்தக் கட்டி ஏற்பட்டு அதன் விளைவின் காரணமாக குழந்தையின் மணிக்கட்டுப்பகுதியோடு கை அகற்றப்பட்டது. இவ்வழக்கில் விசேட நட்டமாக 3.5 மில்லியன் ரூபாவும் மருத்துவப் பதிப்பிற்காக 5 இலட்சமும் என மொத்தமாக 4 மில்லியன் ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கவேண்டும் என மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்தது.