Tag: மரணம்
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி அலைந்த தந்தை ஒருவர் மரணம்
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா, மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது 65) என்ற தந்தையே இன்று (12.10) மரணமடைந்துள்ளார். இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார். அவரைத் தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். . இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குருக்களின் உதவியாளர் மரணம்: குருக்கள் கைது
நோட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளவட்டன் தோட்ட பிள்ளையார் ஆலயத்தின அறையொன்றில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சிறுவனின் சடலம், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ராமமூர்த்தி பார்வையிட்டார். அதன் பின்னர் கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு சடலம், செவ்வாய்க்கிழமை (03) மாலை கொண்டுச்செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் ஆலய குருக்கள் கைது செய்யப்பட்டுள்ளார். ஒஸ்பன் தோட்ட கீழ்ப்பிரிவில் வசித்து வந்த எஸ். ஜனநாதன் (வயது 16) சிறுவனே தோட்டத்தின் விநாயகர் ஆலய அறையில் செவ்வாய்க்கிழமை (03) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவர் பிரதான குருக்களுக்கு உதவியாளராக பணியாற்றிவந்துள்ளார். சம்பவம் தொடர்பில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 16 வயதான இளம் பூசகரின் விபரீத முடிவு
கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென மரணம்
அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. மற்றுமொரு நகரிலிருந்த தேவையின் நிமித்தம் அங்கு வந்தவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அந்தப் பகுதியில் சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த வேளையில் உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாக கதிரையில் அமைதியாக இருந்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்குத்தில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் எண்ணியுள்ளனர். எனினும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் சென்று பரிசோதித்த போது, அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஊசியால் பல்கலைக்கழக மாணவன் மரணம்: மறுக்கும் வைத்தியசாலை
காலியில் தடுப்பூசி காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம் திலீபன் பேரணி மீது குண்டர்கள் தாக்குதல்: சிங்கள செயற்பாட்டாளர் கடும் கண்டனம் இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். ஊசியை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மஹரகம வைத்தியசாலையிடம் வினவிய போது, அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்
யாழில் கடமைக்குச் சென்ற ஊழியர் வீதியில் மயங்கி விழுந்து மரணம்
தென்மராட்சி மட்டுவில் பிரதேசத்தில் இருந்து கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடமைக்கு சென்ற ஊழியர் ஒருவர் இன்று (15) காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டு வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மேற்படி ஊழியர் பேருந்தில் இருந்து இறங்கி தனது அலுவலகத்திற்கு செல்ல முற்பட்ட போதே வீதியில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கைதடி பனை ஆராய்ச்சி நிறுவன பணியாளரான 49 வயதான மா.சதீஸ்குமார் எனத் தெரிய வருகிறது. மாரடைப்பு காரணமாக குறித்த மரணம் சம்பவித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது