Home Tags நேர்ந்த

Tag: நேர்ந்த

மூன்று பிள்ளைகளை தாய் மண்ணிற்கு விதையாக்கிய தாய் ஒருவரிற்கு நேர்ந்த அவலம்!

மூன்று பிள்ளைகளை தமிழர் தாயகம் காக்க அர்பணித்த தாயின் இன்றய நிலைமை வெட்கி தலை குனிய வேண்டும் எம் தமிழினம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற சம்பவம் குறித்து முகநூல்வாசி ஒருவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். அந்த தாய் போன்றவர்களுக்கு பாவம் செய்தால் நாங்கள் ஆறு அறிவுள்ள மனிதர்களாக இருக்க முடியாது எனவும் அவர் இடித்துரைத்துள்ளார். சம்பவம் குறித்து அவர் தனது பதிவில், கிளிநொச்சி பிரதேச சபை தரங்கெட்ட நிர்வாக தலைமையில் இயங்குகிறதா என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் உருவாக்கியுள்ளது. கிளிநொச்சி முருகன் ஆலையத்திற்கு முன்னால் வீதியோரமாக வியாபாரம் செய்து வரும் இவர் மூண்று மாவீரர்களின் தாய் என என்னிடம் தன்னை பல தடவை வீரமாக அடையாளப்படுத்துவார். இன்று வீதியில் செல்லும் அனைவரிடமும் கை ஏந்தி என்னுடைய கடையை உடைக்க வேண்டாம் என சொல்லுங்கள் “ என்று அழுது புலம்புகிறார் காரணம் அது கிளிநொச்சி பிரதேச்சபைக்கான இடம் என்பதால் உடைத்து எறிகிறார்கள். 7-10 […]

புலிகளை விமர்சித்த சட்டத்தரணிக்கு யாழில் நேர்ந்த பரிதாபம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது. இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார். இவரது கருத்திற்கு பல்வேறு தரப்புகளும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர் இந் நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா பங்கு பற்றும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய நிலையில் குறித்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது.

நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 20 வயது யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க புரத்தைச் சேர்ந்த அயோத்திய தேசானி (வயது 20) யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, உயிரிழந்த மாணவி கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர் எனவும், புத்தளத்தில் உள்ள தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை இரவு உறவினர்களோடு முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. திருமண நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின்னர் தனது உடல்நிலை சரியில்லை எனவும் உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிய யுவதி, அங்கிருந்து முச்சக்கர வண்டியிலேயே தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். இவ்வாறு முச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள […]

கற்பூரத்தால் நேர்ந்த விபரீதம்!! 6 பேர் கவலைக்கிடம்.. 16பேர் வைத்தியாசலையில்

கொழும்பு புறக்கோட்டை 2 ம்குறுக்குத் தெருவில் அமைந்துள்ள கடை ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (27) தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏழு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், திடீரென ஏற்பட்ட தீயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் காயமடைந்த நிலையில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு புறக்கோட்டை 2ம் குறுக்கு தெருவில் உள்ள 8 மாடி கட்டடிமொன்றில் அமைந்துள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து இன்று காலை 9.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவிக்கின்றது. கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து 7 தீயனைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு தீ […]

காலக்கொடுமை!! 15 வயது சிறுவனால் 8வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.