Tag: நிலையில்
வவுனியாவில் கைகள் மற்றும் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர். இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!
இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின் சடலம் ஒன்றை இராகலை பொலிஸார் நேற்று (02.11.2023) மாலை மீட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. சடலமாக மீட்க்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய்,தந்தையரை தாக்கி சண்டையிட்டு நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனது உடம்பு கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு பின் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார். இதையடுத்து குறித்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு […]
காயங்களுடன் நிர்வாணமான நிலையில் திருமணமாகாத பெண்ணின் சடலம் மீட்பு
ஹன்வெல்ல வெலிகன்ன, உலிவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இரத்தக் கறைகளுடன் அறையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (05) நிர்வாணமான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ஹன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குழு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். இந்த மரணம் கொலையாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான மரணமாகவோ இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், குறித்த மரணம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஹன்வெல்ல, வா வெலிகன்ன, உலிவத்த பகுதியைச் சேர்ந்த தங்கல்லயைச் சேர்ந்த டோனா மலானி என்ற 70 வயதுடைய திருமணமாகாத பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
உடப்பு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர். பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர். குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர். மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். […]
முண்டமாக மீட்கப்பட்ட பிரதீபா சில்வா ; பிரதான சந்தேகநபர் சரணடைந்த நிலையில் உடலை துண்டாக்க உதவிய தரகரும் சரண்
சியம்பலாப்பே பிரதேசத்தில் தலை மற்றும் கால்கள் இல்லாத நிலையில் முண்டமாக மீட்கப்பட்ட பிரதீபா சில்வா எனும் பெண்ணின் சடலம் தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் சபுகஸ்கந்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாப்பே தெற்கில் வசிக்கும் 53 வயதுடைய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தனது சட்டத்தரணிகளுடன் பொலிஸில் வந்து சரணடைந்ததைத் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த கொலைச் சம்பவத்துக்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபரும் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். தரகரான இவர், கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை துண்டாக்குவதற்கு பிரதான சந்தேகநபருக்கு உதவியதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதேவேளை, சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது, பெண்ணின் சடலத்தை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 51 வயதான பிரதீபா எனும் பெண் […]