Tag: நள்ளிரவு
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒடோ டீசல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 356 ரூபாவாக அதிகரித்துள்ளது. சுப்பர் டீசல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 431 ரூபாவாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது
நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை எகிறியது
92 பெற்றோலின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு லீற்றர் பெற்றோலின்...
இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !
இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை...
எரிபொருள் விலை குறைப்பு! நள்ளிரவு முதல் நடைமுறை
லங்கா ஐஓசி மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத் தாபனம் ஆகிய நிறுவனங்கள் டீசலின் விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளன.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு டீசலின் விலை குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, ஒரு லீட்டர்...