Home Tags தொலைபேசி

Tag: தொலைபேசி

தொலைபேசி கேட்ட மகள், கொடுக்க மறுத்த தாய்!! 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா பிரதேசத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த (12) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருந்தையடிமுன்மாரி காஞ்சிரங்குடா பிரதேசத்தைச் சேர்ந்த (16) வயதுடைய கிஸ்ணமூர்த்தி ரணித்தா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். சம்பவ தினத்தன்று வழமை போல பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் தாயாரிடம் கையடக்க தொலைபேசியை கேட்ட போது யுவதியின் தாயார் தொலைபேசியை கொடுக்க மறுத்ததாகவும் தாயார் உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கிட்ட நிலையில் தூக்கில் இருந்து உறவினர்கள் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி […]

ஐஸ் போதை வியாபாரியிடம் தொலைபேசி, பணம் கொள்ளை – 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

வெலிக்கடை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து ஆப்பிள் கையடக்கத் தொலைபேசி மற்றும் 25 ஆயிரத்து 300 ரூபா பணம் ஆகியவை பலவந்தமாக பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இருவர் கோட்டை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இரண்டு கான்ஸ்டபிள்களும் மேற்படி சந்தேக நபரை கடந்த ஜுலை 23 ஆம் திகதி ராஜகிரிய, ஃபோர்டேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக 2 கிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்து முச்சக்கரவண்டியில் ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில் பலவந்தமாக பொருட்களை எடுத்துச் கொண்டு அவரை விடுவித்துள்ளனர். இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸாரிடம் சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இரவோடு இரவாக சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவிக்க தடை??

18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கைத்தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்கள் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான தடைச் சட்டத்தை கொண்டு வரத் தயார் எனவும், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். கைத்தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் சிறுவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் குழந்தைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அவர் கூறினார். பல சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளினால் தமது வாழ்வை நாசமாக்கிக் கொண்டிருப்பதாகவும், இன்று அவர்கள் பாடசாலைக்கு கையடக்கத் தொலைபேசியைக் கூட எடுத்துச் செல்வதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது கருத்தை அல்லது தகவலினை ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு பரிமாற்றம் செய்ய உதவும் கருவிகள் […]

திருமணத்திற்கு முன் விடுதியில் தங்கிய காதலர்கள்!! காதலிக்கு வந்த தொலைபேசி அழைப்பால் பின்னர் நேர்ந்த விபரீதம்

நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்தியதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி காதலனால் படுகாயமடைந்த 29 வயதான காதலி வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் திருமணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இருவரும் விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் காதலன் என கூறப்படும் இளைஞன் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது ​​காதலியின் கையடக்கத் தொலைபேசி எண்ணுக்கு முன்னதாக வந்த அழைப்பு ஒன்றின் எண்ணை காதலன் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து காதலன் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக தெரியவந்துள்ளது.

தொலைபேசி அழைப்பால் உயிரிழந்த பாடசாலை மாணவன்

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டியில் உள்ள...