Tag: திருட்டு
இணுவில் இன்று அதிகாலை 140 தங்கப் பவுண் நகைகள் திருட்டு
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 140 தங்கப் பவுண் நகை மற்றும் பெறுமதியான அலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இணுவில் பாரதி வீதியில் உள்ள வீட்டில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் அடுத்தடுத்து இறைபதமடைந்த நிலையில் இன்று காலை ஆத்ம சாந்தி வழிபாடு வீட்டில் இடம்பெறவிருந்தது. அதற்காக உறவினர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில் அதிகாலை அலைபேசியை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தேடிய போது, வீட்டின் பின்பக்க கதவும் திறந்திருந்துள்ளது. அதனால் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்த போது அங்கு நகைகளை காணவில்லை எனத் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பரம்பரை நகைகள் 140 தங்கப் பவுணை வீட்டில் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நிறைவடைந்ததும் வங்கி பெட்டகத்தில் வைக்க இருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் […]
யாழில் வீடொன்றில் வெளிநாட்டு பணம், தங்க நகைகள் பட்டப்பகலில் திருட்டு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகுட்பட்ட நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் இன்று (29) முற்பகல் வெளிநாட்டு பணம், தங்க சங்கிலி, தோடு, என்பன திருடப்பட்டுள்ளன.
குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
யாழ்ப்பாணம் பொலிஸ்...
யாழில் வடிவேலு பாணியில் திருட்டு: ஓடிப்பார்ப்பதாக கூறி கடத்தப்பட்ட வாகனம் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!
தென்மராட்சி கைதடியில் வடிவேலு பாணியில் கடத்தப்பட்ட ஹைஏஸ் வாகனம், மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைதடி மேற்கை சேர்ந்த ஒருவர் தனது ஹைஏஸ் வாகனத்தை விற்பனை செய்ய...
பருத்தித்துறையில் மயக்க மருந்து தெளித்து கொள்ளை: திருட்டு நகைகளை அடகு வைக்க வந்த இ.போ.ச சாரதி கைது
பருத்தித்துறை, திக்கம் பகுதியில் வீடு புகுந்து பெருமளவு நகை, பணம் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட நகைகளை நிதி நிறுவனமொன்றில் அடகு வைக்க வைக்க இ.போ.ச சாரதியொருவர் நேற்று மாலை நெல்லியடி நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம்...
பொலிஸ் அதிகாரி ஒருவரின் சகோதரர் தலைமையில் இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டு அம்பலம்!
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சில காலமாக இடம்பெற்று வந்த கறுவாப்பட்டை திருட்டொன்றை கரந்தெனிய பொலிஸார் வெளிக்கொண்டு வந்துள்ளனர்.
குறித்த பகுதியில் உள்ள கறுவாத் தோட்டங்களில் திருடப்பட்ட சுமார் 25 கிலோ கறுவா மீட்கப்பட்டுள்ளதுடன்,...