Tag: தாய்க்கு
வைத்தியசாலையிலிருந்த மகனை பார்க்கப் போன தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் ஆசனத்தில் இருந்தவாறே உயிரிழந்துள்ள நிலையில் பஸ்ஸின் சாரதியும், நடத்துனரும் அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற சம்பவம் ஒன்று மஹரகம பொலிஸில் பதிவாகியுள்ளது. அம்பலம் வல்பொல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஐ.எம்.ரமயகாந்தி என்ற ஆறு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் மகனை பார்ப்பதற்காக கிரிந்திவெல டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸில் நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலைக்கு சென்றுக் கொண்டிருந்தபோதே திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ் வைத்தியசாலைக்கு அருகே வந்ததும், அங்கிருந்தவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி வெளியேறியதாகவும், குறித்த பெண் பஸ்ஸிலிருந்து இறங்காத காரணத்தால் நடத்துனர், அவரை எழுப்ப முயன்றபோதும் பதிலளிக்காததை கண்ட பஸ்ஸின் சாரதி உடனடியாக பஸ்ஸை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், மஹரகம பிரதேசத்திற்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி டக்ளஸ் ரூபசிறி […]
மகனின் கள்ளக்காதலால் தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்டு, அவருடைய சடலம் எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் உட்பட மூவர், சூரியவெவவை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதான பெண்ணொருவரை...