Tag: தற்கொலை
நிர்வாண புகைப்படங்கள்!! இலங்கையில் கடன் வழங்கும் கும்பலின் மிரட்டலால் தற்கொலை செய்த இந்திய குடும்பம்!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், இலங்கையிலிருந்து இணையத்தில் உடனடி கடன் வழங்கும் குழுவொன்றின் மீது கவனம் செலுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 12 ஆம் திகதி, 39 வயதான நிஜோ, அவரது மனைவி ஷில்பா (32) மற்றும் அவர்களது குழந்தைகளான எபல் (7), ஆரோன் (5) ஆகியோர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர்களது உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களில் ஒருவரின் ஆபாசப் படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்பப் பயன்படுத்திய எண்ணை போலீஸார் கண்டறிந்ததும் விசாரணை வேறு திருப்பத்தை எடுத்தது. “விசாரணையின் போது, ஆன்லைன் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஷில்பா கடன் வாங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவற்றை திருப்பிச் செலுத்துவதில் அவருக்கு சிரமம் உள்ளது. பின்னர், இந்த நிறுவனங்கள் ஷில்பா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியது. அந்த கையடக்கத் தொலைபேசி எண்ணைப் பார்த்தபோது […]
கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவம் இன்று (19-10-2023) காலை இடம்பெற்றுள்ளது. கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்துவந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் மட்டக்களப்பு போரதீவுப்பற்று திருப்பழுகாமம் கிராமத்தை பூர்விகமாக கொண்டதுடன் கண்டி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்ததுடன் பல்கலைக்கழக கல்வியை நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்து தொடர்ந்து வந்த நிலையிலையே இந்த விபரித முடிவினை எடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன?
மன்மத மாமனாரின் கொடூரம் தாங்க முடியாமல் 19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி! நடந்தது என்ன? யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின் பெற்றோர் காணொளி ஒன்றில் தெரிவித்தது,சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபரொருவர் தனது 19 வயதான பிள்ளையை திருமணம் செய்துகொண்டு சுவிஸ்க்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, சுவிஸுக்கு அழைத்து சென்று 3 மாதங்களே ஆன நிலையில் மாமனாரின் கொடூரமான செயல்களை தாங்க முடியாமல் குறித்த யுவதி 3 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கால் மற்றும் முதுகு தண்டுவடம் முறிந்த நிலையில் சுவிஸில் உள்ள ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தாய் தெரிவித்துள்ளார். இந்த […]
யாழில் காதலி அனுப்பிய குறுஞ்செய்தியால் பீதியடைந்து இளைஞன் தற்கொலை
தன்னை திருணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்யப் போவதாக காதலி அனுப்பிய குறுந்தகவலால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி, கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார். காதலித்த பெண்ணுக்கு வயது குறைவு என்பதால் இளைஞரின் தந்தை கண்டித்துள்ளார். பெண்ணுடன் கதைக்க வேண்டாம் என மகனை கண்டித்ததுடன், வயது வந்ததும் திருமணம் குறித்து பேசலாம் என பெண் வீட்டாரிடமும் கூறியுள்ளார். அது காதலிக்கு பிடிக்கவில்லை. தன்னை தவிர்த்து விட இப்படி நாடகம் ஆடுகிறார்கள் என சந்தேகித்தார். இதனால் தன்னை திருமணம் செய்யாவிடில் தான் தற்கொலை செய்யப்போவதாக பெண் தனது காதலனுக்கு தொலைபேசியூடாக தகவல் அனுப்பியுள்ளார். இதனால் பீதியடைந்த இளைஞர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சடலம் உறவினரகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை
எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இன்று (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சுரேஸ்குமார் தனிகை வயது 17 லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரண்டு சிறுமிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர் இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா் சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலீஸார் சடலத்தை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனு்ப்பி வைத்துள்ளனர். அத்தோடு இது தற்கொலையா? கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.