Home Tags தங்கப்

Tag: தங்கப்

இணுவில் இன்று அதிகாலை 140 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 140 தங்கப் பவுண் நகை மற்றும் பெறுமதியான அலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இணுவில் பாரதி வீதியில் உள்ள வீட்டில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் அடுத்தடுத்து இறைபதமடைந்த நிலையில் இன்று காலை ஆத்ம சாந்தி வழிபாடு வீட்டில் இடம்பெறவிருந்தது. அதற்காக உறவினர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில் அதிகாலை அலைபேசியை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தேடிய போது, வீட்டின் பின்பக்க கதவும் திறந்திருந்துள்ளது. அதனால் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்த போது அங்கு நகைகளை காணவில்லை எனத் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பரம்பரை நகைகள் 140 தங்கப் பவுணை வீட்டில் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நிறைவடைந்ததும் வங்கி பெட்டகத்தில் வைக்க இருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் […]

மொனராகல நகரில் கண்டெடுக்கப்பட்ட பெறுமதியான தங்கப் பொதியை பொலிஸாரிடம் கையளித்த நபர்!

மொனராகல கல்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.லக்மால் தயாரத்ன என்பவர், மொனராகலை சந்தைப் பகுதிக்கு அருகில் ஏழரை இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் பதக்கங்கள் அடங்கிய தங்கப் பொதியைக்...