Home Tags தகராறு

Tag: தகராறு

மதுபோதையில் தகராறு செய்த இளம் கணவனை போட்டுத்தள்ளிய மனைவி

நுவரெலியா, விஜிதபுர பிரதேசத்தில் பெண்ணொருவரின் தாக்குதலில் கணவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேகத்திற்கிடமான பெண் தனது கணவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று இரவு பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். சடலம் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் விசாரணை நடத்தப்படவுள்ளது. 32 வயதுடைய பெண் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் தகராறு விபரீதத்தில் முடிந்தது: 20 வயது மகள் பலி; தாய் வைத்தியசாலையில்

ரத்கம ஓவகந்த பிரதேசத்தில் தாய் மற்றும் மகளை உறவினர் ஒருவர் கத்தியால் குத்தியதில் மகள் உயிரிழந்துள்ளதுடன் தாய் பலத்த காயமடைந்து காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்று (26) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரத்கம...

கணவருடன் தகராறு: பிள்ளைகளை பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்த தாயார்!

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, இரு பிள்ளைகளையும் பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு பெண் ஒருவர் ஆற்றில் குதித்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம்...

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயது பிள்ளைகளை கொன்ற தந்தையும் தற்கொலை

குடும்பத் தகராறு காரணமாக 6 மற்றும் 9 வயதுடைய மகள் மற்றும் மகனைக் கொன்றதுடன் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரனாயக்க பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. அரநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல் அம்பேகொட கொதிகமுவவில்...