Home Tags சோகம்!

Tag: சோகம்!

புற்றுநோயின் கொடுரம்!! யாழில் 17 வயது மாணவி சிகிச்சை பலனின்றி பலியான சோகம்

வடமராட்சி நவிண்டில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த லோகராசா லோசனா வயது 17 என்ற மாணவியை இ்வ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

கிணற்றில் வீழ்ந்த மகளைக் காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி பலியான சோகம்

வாரியபொல வல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 6 வயதான மகளும் அவரது தாயும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர். குருணாகல் பாதுகாப்பு சேவை கல்லூரியில் முதலாம் தரத்தில் கல்வி பயின்ற ஆர்.எம். கோவித சாரமித் (6) தாயான லக்மாலி வீரசிங்க (37) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இவர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில் குளிப்பதற்குச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். கிணற்றில் வீழ்ந்த சிறுமியைக் காப்பாற்ற தாய் கிணற்றில் குதித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுமியின் தந்தை கடற்படையில் பணிபுரிவதாகவும் அவர் தூர மாகாணத்தில் இருப்பதால் தாயும் மகளுமே மட்டுமே வீட்டில் நேரத்தைக் கழிப்பதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வகுப்பறைக்குள் விளையாடிய மாணவனிற்கு எமனான மின்விசிறி – புசல்லாவையில் சோகம்!

வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது . புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த ராஜரட்னம் சதுர்சன் (வயது – 15) என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, பாடசாலை மைதானத்தில் இன்று சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. நிகழ்வுகள் முடிவடைந்த பின்னர் பகல் 1.30 மணியளவில் வகுப்பறைக்கு திரும்பிய குறித்த மாணவர், மேசைமீது ஏறி, பாய்ந்து விளையாடியுள்ளார். இதன்போது வகுப்பறையில் இயங்கிக்கொண்டிருந்த மின் விசிறியில் அவரின் தலை பகுதிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவன் வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு மணிநேரத்துக்கு பின்னரே கம்பளை வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அதிக இரத்தபோக்கே மரணத்துக்கு […]

மருத்துவபீட மாணவன் Mohamed Ayman சிகிச்சை பலனின்றி பலியான சோகம்

எங்கள் குடும்பத்தின் புன்னகை இளவரசன் Mohamed Ayman எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி சற்று முன் இறை அழைப்பை ஏற்றுக்கொண்டார் என Mohamed Ayman இன் தாயின் சகோதரர் Sabir Musthafa ( ஆசிரியர் ) தெரிவித்தார். பேராதனை பல்கலை இறுதி ஆண்டு மருத்துவ பீட மாணவரான இவர் சில நாட்களுக்கு முன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் கல்முனை பழைய தபாலக வீதியைச் சேர்ந்தவர், பேராதனை பல்கலைகழக வைத்தியபீடத்தின் இறுதியாண்டு மாணவனும் முன்னாள் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் முஹமட் சேர் அவர்களின் அன்பு மகனும் அவார். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக. அன்னாரின் இப்பாரிய இழப்பை தாங்கும் மன வலிமையையும் பொறுமையையும் அன்னாரின் குடும்பம், உற்றார் உறவினர்களுக்கு வல்ல இறைவன் வழங்குவானாக! ஜனாஸா நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தாய்ப்பால் புரைக்கேறி 3 வயதுக் குழந்தை உயிரிழப்பு – வட்டுக்கோட்டையில் சோகம்!

தாய்ப்பால் புரைக்கேறி 3 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (செப்ரெம்பர் 24) வட்டுக்கோட்டை மேற்கில் நடந்துள்ளது. கி.ஹரிகரன் என்ற 3 வயது ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது. நேற்றுக்காலை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு தாய் ஏணையில் இட்டுள்ளார். சிறிதுநேரத்தின் பின்னர் குழந்தையை அவதானித்தபோது குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது. பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை சங்கானை பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என்று அறிக்கையிட்டுள்ளனர். குழந்தையின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறப்பு விசாரணைகளை வலி.கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். தாய்ப்பால் புரைக்கேறியே குழந்தை உயிரிழந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.