Home Tags கிளிநொச்சியில்

Tag: கிளிநொச்சியில்

கிளிநொச்சியில் பயங்கரம்!! இளம் தந்தை அடித்துக் கொலை..!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இளம் தந்தை ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கல்மடுநகர் – சம்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்த்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். வெற்றிலை வாங்குவதற்காக கடைக்கு சென்ற குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. குறித்த அழைப்பின் பின்னர் அந்த நபர் கடையை விட்டு மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றுள்ளார். சற்று நேரத்தில் சத்தம் கேட்டது. அதன் பின்னர் இருவர் சம்பவ இடத்தை விட்டு ஓடினர். இரவு என்பதால் அடையாளம் காண முடியவில்லை என பொலிசாரின் விசாரணைக்கு சம்பவத்தை அவதானித்தவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபர் கட்டையால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக […]

கிளிநொச்சியில் கோர விபத்து-3 பிள்ளைகளின் தந்தை ஸ்தலத்திலே பலி

முறிகண்டி, செல்வபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (21) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர். பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுqrள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். […]

பிரசவத்திற்காக சென்ற பெண்ணின் சிசு இறந்த நிலையில் கர்ப்பப்பையை அகற்றிய வைத்தியசாலை – கிளிநொச்சியில் சம்பவம்

பிரசவத்திற்காக சென்ற தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் அவரது கணவன் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26.06.2023 குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27.06.2023 அன்று சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை எடுக்கப்பட்டதோடு, தனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இது மருத்துவர்களின் தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று ( 26.09.2023) முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார். தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள் என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை!! கிளிநொச்சியில் நள்ளிரவில் பயங்கரம்

கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில் நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவர் சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குழு முரண்பாடு இச்சம்பவத்திற்கு வழியமைத்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோத கசிப்பு பிடிக்கச் சென்ற பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாயம்!! கிளிநொச்சியில் பரபரப்பு!

கிளிநொச்சி, மலையாளபுரத்தில் கசிப்புக் காய்ச்சுபவர்களைச் சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போயுள்ளார். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மோப்ப நாய்களின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டுள்ளபோதும், இதுவரை பொலிஸ் உத்தியோகத்தரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மலையாளபுரம், புதுஐயங்கன்குளத்தில் கசிப்புக் காய்ச்சுபவர்கள் தொடர்பான தகவல் கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது. இன்று (செப்ரெம்பர் 14) காலை 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த இடத்துக்குச் சென்று விசாரணகைளை ஆரம்பித்தனர். அங்குள்ள காட்டுப் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொண்ட நிலையில், அவர்களில் ஒருவர் இன்னமும் மீளத் திரும்பவில்லை. அந்தப் பகுதி அடர்ந்த காடு என்பதால் காணாமல்போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தரைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.