Home Tags ஒரு

Tag: ஒரு

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த இளம் கற்பிணித்தாயும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (16) திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாய் ஒருவர் நேற்று (16) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கான் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் […]

ஒரு தலைக் காதல் தாக்குதல்!! மூவர் பொலிசில்

யாழ்ப்பாணம் தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து பெற்றோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி மூலம் மூவர் சரணடைந்துள்ளனர். நேற்று அதிகாலை தாவடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாதவர்கள் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கியதுடன், அங்கிருந்த வாகனம் மற்றும் பொருட்களைத் தாக்கிச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றனர். இந்தத் தாக்குதலில் வீட்டிலிருந்த தந்தை, தாய், மகன் மற்றும் இரு மகள்கள் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரு தலைக் காதல் காரணமாகவே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக ஒருதலையாகக் காதலித்த நபர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தார் என்று பாதிக்கப்பட்டவர்களின் முறை்பபாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸார் முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஒருதலையாகக் காதலித்தார் என்று கூறப்படும் இளைஞர் உட்பட மூவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஊடாக நேற்று சரணடைந்துள்ளனர். அதேவேளை, வீட்டின் மீது பெற்றோல் […]

ஒரு தடவைக்கு ரூ.10 ருபா… 5ஆம் வகுப்பு சிறுமியை ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய 68 வயது முதியவர்!

மேற்கு வங்கத்தில் 68 வயது முதியவர் ஒருவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாகப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் தரப்பில் வெளியான தகவலின்படி, டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவருகிறது. சிறுமியிடம் பணம் இருப்பதை அவதானித்த பெற்றோர், அது குறித்து விசாரித்த போது, சிறுமி ஒரு மாதமாக பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி வந்தது தெரிய வந்தது. பெற்றோர் அளித்த புகாரின்பேரில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரான சீதாராம் சிங் மீது கடந்த திங்களன்று போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முதியவரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து கைதுசெய்திருக்கின்றனர். இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், ‘எஃப்.ஐ.ஆர் படி, சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் நடந்தன. குற்றம் சாட்டப்பட்ட உள்ளூர்வாசியான முதியவர், சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு […]

சுகாதார துறையில் தரமற்ற உயிர்கொல்லிகள்?!! மேலும் ஒரு உயிர் பறிபோனது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருப்பினும் குறித்த நபர் ஒவ்வாமை...

திருகோணமலையில் கோர விபத்து!! 9 வயதான சிறுமி உட்பட இருவர் பலி, மேலும் ஒரு சிறுமி உட்பட இருவர்...

திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் 9 வயதுடைய சிறுமியொருவர் தலை நசியுண்டு பலியனார். அவருடன் சென்ற இன்னுமொரு சிறுமி கால் எலும்புகள் நொறுங்கிய நிலையில் அவசர விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்...