Home Tags ஏறாவூர்

Tag: ஏறாவூர்

ஏறாவூரில் 9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 83 வயது முதியவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூரில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 83 வயதுடைய முதியவரை நேற்று புதன்கிழமை (4) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவில் குறித்த பிரதேசத்திலுள்ள 9 வயது சிறுமி மீது 83 வயதுடைய முதியவர் பாலியல் சேட்டை புரிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதன் பின்னர், குறித்த முதியவரை நேற்று மாலை அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்ததுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடருந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது. மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவரின் கழுத்தையறுத்து 10 பவுண் தங்க ஆபரணம் கொள்ளையடித்த கொள்ளையன் தப்பி ஓட்டம்

மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையன் அங்கு தனியாக இருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தை கத்தியால் வெட்டி அவரின் கழுத்தில் இருந்த 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று திங்கட்கிழமை (2) காலையில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொம்மாந்துறை பகுதியில் தனிமையில் இருந்த 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் வீட்டினுள் சம்பவதினமான இன்று காலை 7.30 மணிக்கு துவிச்சக்கர வண்டியில் தனியாக சென்ற கொள்ளையன் ஒருவன் உப்புகுந்து அவருடன் உரையாடிய நிலையில் அவர் வீட்டினுள் இருந்து வெளியே வந்ததையடுத்து அவரின் கழுத்தை கத்தியால் குத்தி அவரின் கழுத்தில் இருந்த சுமார் 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் தப்பி ஓடியுள்ளான். இதனையடுத்து வயோதிப பெண் சத்தமிட்டதையடுத்து அயலவர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று […]

ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..! படங்கள்

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் ஏழு வயது சிறுமி தாமரைக்கேணி குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பகுதியில் தாமரைக்கேணியை சேர்ந்த ஏழு வயதுடைய மர்சூக் பாத்திமா றினா என்ற சிறுமியே நேற்று...

7 வயதுச் சிறுமி நீரில் மூழ்கி மரணம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணியில் நேற்று மாலை சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சிறுவர்கள் பலருடன் தாமரைக்கேணியில் நீராடிக் கொண்டிருக்கும் போதே சிறுமி நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக விசாரணைகளின் போது...