Tag: உயர்தரப்
சற்றுமுன் வெளியானது 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற பக்கத்தின் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்றிருந்தது. இதில் 278,196 பாடசாலை மாணவர்களும் 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவ்வாறான நிலையில் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டதனால், விடைத்தாள் திருத்தும் செயற்பாடு பின்னடைவை சந்தித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு 3000
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்குதல் குறித்த அமைச்சரவை பத்திரம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கல்வி...