Home Tags இளைஞன்

Tag: இளைஞன்

யாழில் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (31) இரவு நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த குணாராசா தனுஷன் (25 வயது) என்பவரது சடலம் மீட்கப்பட்டது. பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையின் போது ஐஸ் போதைப்பொருள் பாவனையால் ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு

திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , நபர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் , உயிரிழந்தவரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் விழாவெட்டுவான் -நாகக்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரென பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி உயிரிழந்த நபர் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கம்பம் ஒன்றில் மோதுண்டதில் சம்பவம் இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதே வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கழிப்பறைக்குள் ஜஸ்!! யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்! நடந்தது என்ன?

யாழில் அதிக ஜஸ் போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கழிப்பறைக்குள் உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை. இந்நிலையில் தாயார் கதவை திறக்க முற்பட்டபோது அது திறபடவில்லை. இந்நிலையில் தாயார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தவேளை அவர் இறந்த நிலையில் காணப்பட்டார். அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின்படி ஊசி மூலம் அதிக ஜஸ் போதைப்பொருள் பாவனை காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது. அவரது வீட்டிலும் போதைப்பொருள் ஏற்றும் ஊசி உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.கோப்பாயில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன் தலைமறைவு!

மாணவி ஒருவர் குளிக்கும்போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் மாணவி ஒருவர் குளிக்கும்போது , குளியல் அறை, மேல் ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்றினை கண்ட மாணவி சத்தமிட்டுள்ளார். அதனை அடுத்து பெற்றோர் அவ்விடத்திற்கு சென்றபோது , யாரும் அங்கு இருக்கவில்லை. வீட்டின் பின்புறம் வெளி நபர்கள் வருவதற்கான சாத்தியம் காணப்படாததால் அயல் வீட்டு இளைஞன் மீது மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து , கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , அயல் வீட்டு இளைஞனிடம் வாக்கு மூலம் பெற சென்றபோது, இளைஞன் தலைமறைவான விடயம் பொலிஸாருக்கு தெரியவந்தது. அதனை அடுத்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பசறையில் வீட்டு தோட்டத்தில் கஞ்சா வளர்த்த இளைஞன் கைது!

பசறை பகுதியில் 100 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெமேரியா A பிரிவு, மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக பசறை ஆக்கரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது பயிரிடப்பட்டிருந்த 1 அடி உயரமுள்ள 100 கஞ்சா செடிகளும் 9 கிராம் காய்ந்த கஞ்சாவும் விஷேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் டெமேரியா A மாத்தன்னை பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரையும் கஞ்சா செடிகளும் பசறை பொலிஸ் நிலையத்தில் விஷேட அதிரடிப் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பசறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் […]