Home Tags இரண்டு

Tag: இரண்டு

வவுனியாவில் கோர விபத்து!! இரண்டு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பலி-ஆறு பேர் படுகாயம்

வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (9) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழிந்ததுடன் 6பேர் படுகாயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று (9) 9.30 மணியளவில் மடுகந்தை பகுதியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த அதிரடிப்படைக்கு சொந்தமான ஜீப் ரக வண்டி ஒன்று வெளிக்குளம் பகுதியில் பயணிக்கும் போது வீதியின் குறுக்கே சென்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் வண்டியில் பயணித்த பொலிஸ் விசேட அதிரடிப்படையை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நோயாளி அடித்து கொலை: இரண்டு தாதியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

மனநோயாளி அடித்து கொலை: இரண்டு செவிலியர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் இருவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு மேலதிக நீதவான் திருமதி தரங்கா மஹவத்த நேற்று (05) உத்தரவு பிறப்பித்தார். தாக்குதலின் போது இரண்டு செவிலியர்களும் அங்கிருந்தவர்கள் என்பது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவாகிறது. பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான், மேற்படி விசாரணைகளில் இருவரையும் சந்தேக நபர்களாக பெயரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், குறித்த உத்தரவை உடனடியாக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த மரணம் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தமக்கு துளியும் திருப்தியளிக்கவில்லை எனவும், எனவே விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் மரணமானவரின் உறவினர்களின் உரிமைக்காக வாதிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்து பல […]

3 கோடி மதிப்புள்ள இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் மாட்டினார்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் பொலிஸ் குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தை மதிப்பு 3 கோடி என்பதுடன் போதை மாத்திரை கடத்தல் உடன் தொடர்பு பட்டதாக தாராபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சான்று பொருள் மற்றும் சந்தேக நபர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

நல்லூர் திருவிழாவில் இரண்டு வயதான குழந்தை மாயம்! – விசாரணை தீவிரம்!

நல்லூர் தீர்த்தத் திருவிழாவான நேற்று இரண்டு வயதும் 6 மாதங்களுமான பெண் குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிக்குளத்தைச் சேர்ந்த பிருத்தி அஸ்விகா எனும் இரண்டு வயது சிறுமியே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் பெற்றோர் நல்லூர் திருவிழாக் காலத்தில் யாசகம் பெறுவதற்காக வவுனியா செட்டிக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளனர். நேற்று நல்லூர் ஆலயப் பின்புற வீதியில் சிறுமி இறுதியாகப் பெற்றோருடன் இருந்துள்ளார். அதன்பின்னர் சிறுமியைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதின்ம வயது சிறுமி இரண்டு வருடங்களாக 10 பேரால் பலாத்காரம்; இலங்கையில் கொடுமை

இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் 15 வயது மாணவி வன்புணர்வுக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டி அருப்பொல பகுதியைச் சேர்ந்த சிறுமியை , 13 வயது...