Home Tags அறிக்கை!

Tag: அறிக்கை!

முல்லைத்தீவு நீதிபதிக்கு எந்த அச்சுறுத்தலுமில்லை; அமெரிக்காவிலிருந்து விமான டிக்கெட் பதிவு: அரசாங்கத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது சிஐடி

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர் திடீரென வெளிநாடு செல்வது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல் தடயவியல் பிரிவு அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. சிஐடியினர் சமர்ப்பித்த அறிக்கையின்படி, செப்டம்பர் 25ஆம் திகதி இந்தியா செல்வதற்கு நீதிபதி விடுப்பு கோரி விண்ணப்பித்தபோது, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, செப்டம்பர் 24ஆம் திகதி அவர் திடீரென வேறு நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று அந்த அறிக்கை கூறுகிறது. சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்திருந்தார். இதன் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) டிஜிட்டல் தடயவியல் பிரிவு மேற்கொண்ட விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பொலிஸாரிடமோ அல்லது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிலோ ஒருபோதும் முறைப்பாடு செய்யாத நீதவான், […]

சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம்! சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, காய்ச்சல் காரணமாக கடந்த மாத இறுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 12 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டிருந்தது. சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த 13 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதவான் சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் அறிக்கை தருமாறு மூவர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்துள்ளார். இந்த விசாரணை குழுவின் அறிக்கை கிடைப்பதற்கு மேலும் 10 நாட்கள் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு நீதவான ஒத்திவைத்துள்ளார். இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய […]

‘சிங்கள கும்பலின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்’ – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை […]

யாழ். மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகம் அதிகரிக்கின்றமையால் அங்குள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என்.சூரியராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 118....