Home Tags அதிர்ச்சி

Tag: அதிர்ச்சி

இளம் தாய் துஷ்பிரயோகம் – மருத்துவ அறிக்கையால் அதிர்ச்சி

பூகொடை – பெபிலி​வல, அம்பகஹவத்த பிரதேசத்தில் குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டு இருந்த போது தன்னை மூவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இளம் தாய் ஒருவர் செய்த முறைப்பாடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. கணவன் வேலைக்குச் சென்றபோது வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் பாலூட்டிக்கொண்டிருந்த தனது குழந்தையை பறித்து தரையில் அடித்து கொலை செய்வோம் என மிரட்டி தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 வயதுடைய மற்றுமொரு இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேகநபர்கள் கம்பஹா பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதுடன், சந்தேகநபர்கள் பெண்ணொருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதற்கான அடையாளங்கள் எதுவுமில்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் பெண் தற்போது […]

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருகோணமலை நகரில் உள்ள பிரபல சைவ ஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. உடனடியாக குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.  tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo […]

தனியார் நிறுவனம் ஒன்றில் மிக கொடூரமாக தாக்கப்பட்ட இளம் பெண் – அதிர்ச்சி வீடியோ

தனியார் நிறுவனம் ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து மற்றொரு பெண்ணை கொடூரமாக தாக்கியுள்ளனர். இது தொடர்பில் பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும், அந்த நிறுவனம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அந்த காணொளியில் ஆண் ஒருவர் அந்த பெண்ணை நாற்காலியால் தாக்குவது பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் மருத்துவத் தவறுகளும், மறைக்கப்படும் உண்மைகளும் – அதிர்ச்சி ரிப்போர்ட் உள்ளே

கடந்த சில மாதங்களாக இலங்கைத் தீவு முழுவதும் வைத்தியசாலைகளில் நடைபெற்ற திடீர் மரணங்களாலும் அதனை ஒட்டி எழுந்த விவாதங்களாலும் நிறைந்திருந்தன. இலவச வைத்தியத்துறையின் பெருமைகளையும் அடைவுகளையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்த விவாதங்கள் அமைந்திருந்தன. இது தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளித்து அவர்களது நம்பிக்கையை தக்க வைப்பதில் எவருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக ‘உள்வீட்டுச் சண்டைகள்’ வெளியகமாக இடம்பெறுவதால் மக்கள் இன்னமும் குழம்பிப்போயுள்ளனர். இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் நிகழ்ந்த மருத்துவ தவறுகளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து ஒரு இளம் தாயாரும் அவரது கணவரும் நீதிக்கான போராட்டம் ஒன்றில் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். ‘அம்பலம் ஏறாத ஏழையின் சொல்’லாக அவர்களது குரல் சரியான வகையில் எத்தரப்பினராலும் வெளியே கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை. அண்மையில் குறித்த கணவர் என்னைத் தேடி வந்து சந்தித்து தம்வசம் இருக்கும் ஆவணங்களைக் காட்டி தமது நீதிக்கான போராட்டத்தில் துணைபுரியுமாறு கோரியிருந்தார். இதனையடுத்து மேற்கொண்ட தேடலில் அந்த இளம் […]

கார்கில்ஸ் சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்: வெளியான அதிர்ச்சி காணொளி

இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டான கார்கில்ஸில் இளம் பெண் ஒருவர் அந்த ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹன்வெல்ல கிளையில் பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்களால் பெண் வாடிக்கையாளரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தாக்குதலுக்கு உள்ளான பெண் ஹேலிஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி என்று தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் குறித்த இடத்தை உறுதிப்படுத்தி சந்தேக நபர்களை அடையாளம் காண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான திருட்டுக்கு பதிலளிக்கும் வகையில், விற்பனை நிலையத்தின் பல ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் என்பது இப்போது தெரியவந்துள்ளது. இது குறித்து கார்கில்ஸ் வெளியிட்ட அறிக்கையில், சுப்பர் மார்க்கெட்டில் திருட்டு தொடர்பான எங்கள் விற்பனை நிலையத்தில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம். இந்த நடத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கார்கில்ஸ் நிறுவனத்தின் செயல்முறையுடன் இவ்வாறான செயல் […]