முல்லையில் 15 வயதான மாணவியை கடத்தி சென்ற தென்னிலங்கையர்
முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு, மாங்குளம்- கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிழவன்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய தரம் ஒன்பதில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் கடந்த முதலாம் திகதி பாடசாலைக்கு சென்ற சமயம் காணாமல் போய் இருப்பதாக அவரது தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை காணாமல்போன சிறுமி தொடர்பான தகவல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தென்பகுதியில் இருந்து குறித்த பிரதேசத்திற்கு வேலைக்காக வந்து தங்கியிருந்த ஒருவரே மேற்படி சிறுமியை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்த மாங்குளம் பொலிஸார், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய ராசி பலன் – 06.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 06-11-2023, ஐப்பசி 20, திங்கட்கிழமை, நவமி திதி பின்இரவு 05.51 வரை பின்பு தேய்பிறை தசமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 01.22 வரை பின்பு மகம். சித்தயோகம் பகல் 01.22 வரை பின்பு மரணயோகம். கரி நாள். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. இன்றைய ராசி பலன் – 06.11.2023 மேஷம் இன்று உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு தெய்வ தரிசனத்திற்காக தூர […]
யாழில் மாணவிக்கு குஞ்சு மணியை காட்டியவர் மாட்டினார்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியில் தனிமையில் சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட ஒருவரை அம்மாணவி துணிகரமாக வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையாக வீதிகளில் செல்லும் மாணவிகளை இலக்கு வைத்து இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன. குறிப்பாக யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலுள்ள புகையிரதப்பாதை, ஆத்திசூடி வீதி, குமாரசுவாமி வீதி, தொழில்நுட்பக் கல்லூரிக்கு அண்மையான ஒழுங்கைகள், கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையான பகுதிகளில் சிலர் மாணவிகளை இலக்குவைத்து இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுவருகிறார்கள். இது தொடர்பில் பல தடவைகள் பொலிஸாரிடம் முறையிட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இக்காணோளியையும், மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என மாணவிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இணுவில் இன்று அதிகாலை 140 தங்கப் பவுண் நகைகள் திருட்டு
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் 140 தங்கப் பவுண் நகை மற்றும் பெறுமதியான அலைபேசி என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை இணுவில் பாரதி வீதியில் உள்ள வீட்டில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது தாயார் அடுத்தடுத்து இறைபதமடைந்த நிலையில் இன்று காலை ஆத்ம சாந்தி வழிபாடு வீட்டில் இடம்பெறவிருந்தது. அதற்காக உறவினர்கள் ஒன்றுகூடியிருந்த நிலையில் அதிகாலை அலைபேசியை காணவில்லை என வீட்டில் இருந்தவர்கள் தேடிய போது, வீட்டின் பின்பக்க கதவும் திறந்திருந்துள்ளது. அதனால் வீட்டில் நகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்த போது அங்கு நகைகளை காணவில்லை எனத் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பரம்பரை நகைகள் 140 தங்கப் பவுணை வீட்டில் ஆத்ம சாந்தி வழிபாடுகள் நிறைவடைந்ததும் வங்கி பெட்டகத்தில் வைக்க இருந்ததாக பொலிஸ் வாக்குமூலத்தில் […]
அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்! வெள்ளவத்தையில் பரபரப்பு
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி, தாவடி என்ற இடத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.