தாயின் இரண்டாவது கணவனால் கர்ப்பிணியான சிறுமியின் கருவை கலைக்க உதவிய பாமசி உரிமையாளர் உட்பட மூவர் கைது
முல்லைத்தீவு குமுழமுனைப்பகுதியில் தாயின் இரண்டாவது கணவன் 13 வயது சிறுமியிடன் தகாத உறவு கொண்ட காரணத்தினால் சிறுமி கர்ப்பம் தரித்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால் உள்ள மருந்தகம் ஒன்றில் சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் 13.11.23 அன்று முல்லைத்தீவு பொலீசில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்களால் தொடரப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலையில் சிறுமியின் கருத்தரிப்பிற்கு காரணமாக இருந்த வளர்ப்பு தந்தை உடந்தையாக இருந்த தாயார், மற்றும் கருக்கலைப்பினை மேற்கொண்ட தனியார் பாமசி உரிமையாளர் உள்ளிட்டவர்கள் முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள். கைதுசெய்யப்பட்ட நபர்களை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.
வவுனியாவில் கைகள் மற்றும் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
வவுனியா, தரணிக்குளம், குறிசுட்ட குளம் பகுதியிலிருந்து இன்று (14.11) மாலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஈச்சங்குளம் பொலிசார் தெரிவித்தனர். தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட அழுகிய நிலையிலுள்ள பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் ஈச்சங்குளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் சடலத்தை பார்வையிட்டதுடன், அதனை மீட்டனர். குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர். இரு கைகளும், காலும் வெட்டப்பட்டிருக்கலாம் என தடவியல் பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என கருதப்படுவதுடன், சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக வவுனியா விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புற்றுநோயின் கொடுரம்!! யாழில் 17 வயது மாணவி சிகிச்சை பலனின்றி பலியான சோகம்
வடமராட்சி நவிண்டில் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார் சம்பவத்தில் நவிண்டில் பகுதியைச் சேர்ந்த லோகராசா லோசனா வயது 17 என்ற மாணவியை இ்வ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
இன்றைய ராசி பலன்கள் – 07.11.2023
இன்றைய பஞ்சாங்கம் 07-11-2023, ஐப்பசி 21, செவ்வாய்க்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை தசமி திதி. மகம் நட்சத்திரம் மாலை 04.23 வரை பின்பு பூரம். நாள் முழுவதும் சித்தயோகம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசி பலன்கள் – 07.11.2023 மேஷம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன கஷ்டங்கள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கா விட்டாலும் நஷ்டம் இருக்காது. உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். […]
இது மட்டுமா வேறொன்றும் இல்லையா.. மாணவியிடம் வெள்ளைக்கோழி பற்றி விசாரித்த முல்லைத்தீவு ஆசிரியர்!
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் அத்துமீறி நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம், குறிப்பிட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு வலயக்கல்விப் பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த ஆசிரியர் மாணவிகளை தனது காதல் வலையில் விழுத்தி ஆபாச குறுந்தகவல்களை மாணவிகளுக்கு அனுப்பியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. பிறந்தநாளில் கண்டோஸ் வாங்கி சென்ற மாணவியிடம் இது மட்டுமா வேறொன்றும் இல்லையா என்று குறித்த ஆசிரியர் மாணவியிடம் தவறாக நடக்க முற்பட்டதாக மனைவியினால் ஆசிரியைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதிபரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த அசிரியரின் ஆபாச குறுந்தகவல்கள் தொடர்புடைய மாணவிகளினால் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டத்தை அடுத்து, ஆசிரியர்களினால் சம்பவம் தொடர்பில் அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது. இருந்தாலும், அதிபர் இந்த விவகாரத்தில் போதிய நடவடிக்கையெடுக்கவில்லையென்பது பெற்றோரின் குற்றச்சாட்டு. மாணவியொருவரிடம் ஆசிரியர் சட் செய்யும் போது, வீட்டில் வெள்ளைக்கோழி இருக்கிறதா என வினவியுளள்ளார். ஆபாச தகவல் அனுப்பியது குறித்த […]