trincomalee news

Home trincomalee news
trincomalee தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

திருமலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை-ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று இன்று (23) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் ஈச்சிலம்பற்று -முத்துச்சேனை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கே.சதீஸ் (35வயது) எனவும் தெரியவருகிறது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் சேர்ந்து மதுபானம் அருந்தியதாகவும், மற்றைய இருவரும் வீடுகளுக்கு சென்றதாகவும் குறித்த நபர் மது அருந்திய இடத்தில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. உயிரிழந்தவரின் வலது காதில் இரத்தம் கசிந்து காணப்படுவதாகவும் சம்பவ இடத்துக்கு மூதூர் நீதிமன்ற பதில் நீதவான் எம்.ஏ.சீ.மஹ்ரூப் சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார். இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் அவருடன் மது அருந்திய நபர்களை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழப்பு

அம்பிகா ஸ்ருடியோ உரிமையாளர் மரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது திருகோணமலையில் பிரபல அம்பிகா ஸ்ருடியோவின் உரிமையாளரும் இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையுமான கனகேஷ்வரன் சுரேஸ் வயது 37 இன்றைய தினம் மரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

திருகோணமலை நகரில் உள்ள பிரபல சைவ ஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது. உடனடியாக குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.  tamilwin news tamil news online tamil win news jaffna news today jaffna today jvpnews jvp news sri lanka tamil news tamilmirror virakesari colombo […]

திருகோணமலையில் இளைஞனின் விபரீத முடிவு

திருகோணமலையில் இளைஞனின் விபரீத முடிவு திருகோணமலையில் மன உளைச்சல் காரணமாக ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை – மட்கோ பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயிலுடன் மோதியதாக தெரிவைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது . போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாலை நேர வகுப்பில் சிறுமிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியரொருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று மாலை சம்பூர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ததற்கமைவாக உடனடியாக சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாடு செய்த இரண்டு மாணவிகளும் தரம் 11 இல் கல்வி பயிலுகின்றவர்கள் என்பதோடு இரண்டு மாணவிகளும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் சம்பூர் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.