Jaffna News

Home Jaffna News
Jaffna News - தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

அடிகாயங்களுடன் கரையொதுங்கிய யாழ் இளைஞனின் சடலம்! வெள்ளவத்தையில் பரபரப்பு

கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (05.11.2023) காலை இளைஞனின் சடலத்தை பார்த்தவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதி, தாவடி என்ற இடத்தை சேர்ந்த 28 வயதான சர்வானந்தா கிருசாந் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் முகத்திலும் உடலிலும் அடிகாயங்கள் காணப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் வழிப்பறி கொள்ளை அமோகம்! – பொலிஸார் அசமந்தமா?

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வீதிகளில் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். நேற்றுமுன்தினம் முச்சக்கரவண்டியில் பயணித்த அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரை வழிமறித்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரைத் தாக்கி விட்டு சங்கிலியை அபகரித்துச் சென்றுள்ளனர். அண்மைய நாள்களில் பெண் ஒருவர் உட்படப் பலரிடம் அந்தப் பகுதியில் வழிப்பறிக் கொள்ளை நடந்துள்ளது என்று பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டபோதும், பொலிஸாரின் நடவடிக்கை திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளைச் சம்பவங்களால் வீதிகளில் நடமாடவே அச்சப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள மக்கள், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

யாழில் மோட்டார் சைக்கிள் திருடன் மாட்டினார்

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாகங்களாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள செல்வா திரையரங்குக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ரக மோட்டார் சைக்கிள் திருடப்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்தவர் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான பொலிஸ் குழு திருட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த, 34 வயதானவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வட மாகாணத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று(03) காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை(04)காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெறமாட்டாது எனவும் அதேவேளை மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர். திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே!, முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர். பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது […]

நெடுந்தீவை உலுக்கிய கொலைச் சந்தேகநபர்!! ஆறு மாதங்கள் முடிந்தும் விளக்கமறியல் நீடிப்பு!

நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (நவம்பர் 1) சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்னர். கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 06 முதியவர்களை படுகொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கொலைக்கென பயன்படுத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் முடிவுற்ற நிலையில் தொடர்ந்து […]