social disorder

Home social disorder
social disorder தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

குழந்தையை கொல்ல போவதாக மிரட்டி இளம் தாயை துஷ்பிரயோகம் செய்த கும்பல்

கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த இளம் தாயின் குழந்தையைப் பணய கைதியாக வைத்து, தாயை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பூகொட பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது. குழந்தையை தரையில் அடிக்கப் போவதாக மிரட்டியே இந்த குற்ற செயல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ் அரச ஊழியர்களின் கள்ள அந்தரங்க வீடியோக்கள் இணையத்தில்-அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மிக வேகமாக பாலியல் துர்நடத்தைகள் அதிகரித்துள்ளன. யாழ் நகர்ப் பகுதிகளுக்கு அண்மையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளை குறி வைத்து அவர்களை துர்நடத்தைகளுக்கு உள்ளாக்குவதற்கென்றே ஒரு குழு ஈடுபட்டு வருகின்றது. காதல் என்ற போர்வையிலும் பணம், கார்களைக் காட்டியும் குறித்த குழுக்கள் மாணவிகளை வேட்டையாடி வருகின்றன. தனது மகள் ரியூசன் மற்றும் மேலதிக கற்றல் நடவடிக்கைக்காக யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றாள் என பெற்றோர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் அவ்வாறு செல்லும் மாணவிகள் மற்றும் இளம் யுவதிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் இலக்கு வைக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றார்கள். இவ்வாறான யுவதிகளை சொகுசு வாகனங்கள் மற்றும் பண ஆசை, வேலை வாய்ப்பு போன்றவற்றை காட்டி தமது இச்சைகளுக்கு உட்படுத்தும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவ்வாறானவர்களுக்காக யாழ். நகர் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் சில சொகுசு வீடுகளில் அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன. அங்கு செல்லும் ஜோடிகளு்ககு சாப்பாடு முதல் சாராயம் […]

7 ஆம் வகுப்பு மாணவிக்கு உணவில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர ஆசிரியர் கைது

மொனராகலை – தொம்பகஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 07 ஆம் தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியரை பொலிஸார் புதன்கிழமை (18) ஆம் திகதி கைது செய்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவி கலபெத்த பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் உள்ள தாம் பாடசாலையில் கல்வி பயின்று வந்துள்ளார். அங்கு கணிதம் கற்பிக்கும் ஆசிரியரின் மேலதிக வகுப்பிலும் கலந்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (08)ஆ ம் திகதி ஆசிரியர், மாணவியின் தாயாரை அழைத்து, கணித பாடத்திற்கு இரண்டு வினாத்தாள்கள் வழங்க வேண்டியுள்ளதால், மாணவியை தன் வீட்டு வகுப்புக்கு அனுப்புமாறு தெரிவித்தார். அதன்படி, மகளை தாயார் வகுப்புக்கு அனுப்பியுள்ளார். தற்போது யாரும் வசிக்காத தனது சகோதரியின் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்ற ஆசிரியர் குறித்த மாணவிக்கு சாப்பிடுவதற்கு உணவுகளை கொடுத்துள்ள நிலையில் மாணவி மயக்கமடைந்ததை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பொலிஸாரால் கைது […]

10 வயது மாணவி வன்புணர்வு – 59 வயதான பாடசாலை பிரதி அதிபர் கைது!

தரம் 5 மாணவியை வன்புணர்விற்குள்ளாக்கிய பாடசாலை பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் பிரதி அதிபரை கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி சந்தேகத்திற்குரிய பிரதி அதிபரால் மாணவி பாடசாலையில் வைத்து வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டதாக பெற்றோர் அளித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று (16) கராப்பிட்டிய சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமியை முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேகத்திற்குரிய பிரதி அதிபர் ஹபராதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையின் விளக்கமறியலில் உள்ள 59 வயதான சந்தேகநபரான பிரதி அதிபர் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

காலக்கொடுமை!! 15 வயது சிறுவனால் 8வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிறுவனை சிலாபம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.