Local news

Home Local news
Local news தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி பலி

ஹோமாகமவில் பாம்பு கடித்ததில் பதினொரு வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம, கொடகம சுபாரதி மகாமத்திய வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனாகொட சமகி மாவத்தையில் வசித்து வந்த சமன்மாலி என்ற 11 வயது மாணவிக்கே இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி தனது மைத்துனியுடன் கடைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியில் பாம்பு கடித்துள்ளது. பின்னர் அவருடைய தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் வரை தனக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி இருந்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாய் பாம்பு கடித்ததை அறியாமல் குழந்தைக்கு இரைப்பை அழற்சி இருக்கலாம் என நினைத்து மருந்து கொடுத்துள்ளார். அப்போது சிறுமி வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் […]

ரிக்-ரொக் மோகத்தால் அநியாயமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்!

ரிக்-ரொக் மோகத்தால் தோணியில் சென்ற இரு இளைஞர்கள் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று மட்டக்களப்பு நகர சபைக்கு உட்பட்ட நாலவடியில் உள்ள வாவியொன்றில் நடந்துள்ளது. மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த 19 வயதான த.கிருசாந்த் மற்றும் 18 வயதான பி.பிருஜனன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் ஏனைய இருவரும் வாவிக்குள் தோணியில் சென்று ரிக்-ரொக் செய்துவிட்டுக் கரைக்குக் திரும்பியபோதே தோணி கவிழ்ந்துள்ளது. நால்வரும் நீரில் மூழ்கிய நிலையில் இருவர் அந்தப் பகுதி மக்களால் காப்பற்றப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அந்தப் பகுதி மீனவர்களும், பொலிஸாரும் இணைந்து மீட்டு மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் காத்தான்குடி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ரிக்-ரொக்கில் பிரபல்யம் அடைவதற்காக ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நோயாளி அடித்து கொலை: இரண்டு தாதியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற தடை

மனநோயாளி அடித்து கொலை: இரண்டு செவிலியர்களும் நாட்டை விட்டு வெளியேற தடை அங்கொட மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் இருவர் வெளிநாடு செல்வதைத் தடுத்து கொழும்பு மேலதிக நீதவான் திருமதி தரங்கா மஹவத்த நேற்று (05) உத்தரவு பிறப்பித்தார். தாக்குதலின் போது இரண்டு செவிலியர்களும் அங்கிருந்தவர்கள் என்பது சிசிடிவி காட்சிகளில் இருந்து தெளிவாகிறது. பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான், மேற்படி விசாரணைகளில் இருவரையும் சந்தேக நபர்களாக பெயரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தெரிவித்த அவர், குறித்த உத்தரவை உடனடியாக குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த மரணம் தொடர்பில் முல்லேரிய பொலிஸார் மேற்கொள்ளும் விசாரணைகள் தமக்கு துளியும் திருப்தியளிக்கவில்லை எனவும், எனவே விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் மரணமானவரின் உறவினர்களின் உரிமைக்காக வாதிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். உயிரிழந்து பல […]

தனியார் பேருந்துடன் மோதிய கொள்கலன் லொறி – விபத்தில் 22 பேர் காயம்

தனியார் பேருந்துடன் கொள்கலன் லொறி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று அதிகாலை 05.00 மணியளவில் கண்டி – கொழும்பு பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் நால்வரின் நிலைமை கவிலைக்கிடமாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விபத்து இடம்பெற்ற அதேநேரம், எரிபொருள் பவுசரும் பஸ்ஸுடன் மோதியுள்ளதாகவும் ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியது

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் செலுதிய கார் மோதியதால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து கொழும்பு நெலும்பொகுன பகுதியில் இருந்து சுதந்திர சதுக்கத்திற்கு செல்லும் வழியில் சி.சி.சி மைதானத்திற்கு அருகில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் மீது கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார். மேலும் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறப்படும் சி ரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.