Ampara news

Home Ampara news
Ampara news - அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறும் செய்திகள் தொடர்பாக அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

கஞ்சிகுடிச்சாறு பகுதியில் விறகு எடுக்க போனவரிற்கு நேர்ந்த பரிதாபம்

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு காட்டு பகுதியில் வைத்து விறகு எடுப்பதற்காக சென்ற ஆண் ஒருவரை கரடி தாக்கியுள்ளது. குறித்த நபர் திருக்ககோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 சின்ன தோட்டம் காயத்திரி கிராமத்தை சேர்ந்த 41வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கரடி தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். இவர் இன்று (18)காலை விறகு எடுப்பதற்காக குறித்த காட்டுப்பகுதிக்கு சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலுக்குள்ளாகிய நபர் பலத்த காயங்களுடன் திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைகாக அம்பாறை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் கடற்கரை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கரையோரப் பாதுகாப்பு தரப்பினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு நாட்கள் பல கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கண்டித்து சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் உள்ள கடற்கரை வீதி பாதையை தோணிகளைக் கொண்டு மறித்து மீனவர்கள் இன்று (18) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிதம டைந்திருந்தது. கடலரிப்பு மற்றும் அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்களால் எங்களது நாளாந்த மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை சாய்ந்தமருது பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு தரப்பினரும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வருகைதந்து மீனவர்களுடன் சமரசமாகப் பேசியதன் பின்னர் சுமார் 02 மணித்தியாலங்களின் பின்னர் கற்கள் போடும் வேலைகளை துரிதமாக செய்கின்றோம் என்று உறுதி தெரிவித்ததற்கு இணங்க மீனவர்களால் தோணிகளைக் கொண்டு […]

பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

- பாறுக் ஷிஹான்- பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு மாணவ...

கோர விபத்தில் பிரபல சமூக செயற்பாட்டாளர் பலி

அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின்( சுவாட்- Swoad) தலைவரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம்(வயது 46) நேற்று நள்ளிரவு இடம் பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியானார். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு...

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பு.

அம்பாரை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் - சென்று கொண்டிருந்த பேருந்தில், மோட்டார்...