Home Authors Posts by Nila

Nila

823 POSTS 0 COMMENTS

கண் வைத்தியர் தனியார் விடுதியில் சடலமாக மீட்பு!

அம்பாறை பொது வைத்தியசாலையின் கண் பிரிவில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் நிலையத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த மருத்துவர், அவர் பணிபுரியும் வைத்தியசாலைக்கு திட்டமிட்டபடி வராததால் வைத்தியசாலையைச் சேர்ந்தவர்கள் அவரது தொலைபேசிக்கு பலமுறை அழைத்தனர். இருப்பினும் அவரிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வைத்தியசாலையைச் சேர்ந்த இரு தாதிகள், குறித்த டாக்டர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றுள்ளனர். அதன்போது குறித்த வைத்தியர் படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் அம்பியூலன்ஸை வரவழைத்து அதன் மூலம் அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். வைத்தியசாலையில் அவரைப் பரிசீலித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு !

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று அதிகாலை (18 -11-2023) சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை தூட்கிட்டு உயிரிழந்துள்ளார் காலை சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு உயிரிழந்தநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார் 31 வயதான சந்திரசேகரம் கஜனன் என்ற இளைஞரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வவுனியா விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

வவுனியா எ9 வீதி சாந்தசோலை சந்தியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாப சாவடைந்துள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்… இன்று மாலை 2 மணியளவில் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது எதி்ரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் சாந்தசோலைப்பகுதிக்குள் திரும்ப முற்ப்பட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குறித்த இளைஞர் சாவடைந்துள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 27 வயதான அக்கராயன் பகுதியில் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவில் பணிபுரியும் திசாநாயக்கா என்பவரே சாவடைந்துள்ளார் விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த இளம் கற்பிணித்தாயும் ஒரு குழந்தையும் உயிரிழப்பு!

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும் பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (16) திருகோணமலை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. மூதூர், இக்பால் வீதியைச் சேர்ந்த இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத இளம் கற்பிணித்தாய் ஒருவர் நேற்று (16) மாதாந்த மகப்பேற்று பரிசோதனைக்காக திருகோணமலை தனியார் வைத்தியசாலை ஒன்றில் ஸ்கான் பரிசோதனையை மேற்கொண்டபோது ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர் தெரிவித்ததுடன் அவரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த தாய் வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டபோதிலும் வழியில் உயர் குருதி அழுத்தம் காரணமாக மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொண்டபோதிலும் குறித்த தாயும் உயிரிழந்ததுடன் ஒரு குழந்தை மட்டும் காப்பாற்றப்பட்டு விசேட சிசு பராமரிப்புப் பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த தாயின் மரணத்திற்கான முழுமையான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் உயர் குருதி அழுத்தம் காரணமாக இருக்கலாம் எனவும் […]

முல்லையில் தொடரும் ஆசிரியர் துஸ்பிரயோகங்கள்!! மேலும் ஒருவர் மாட்டினார்

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில, பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற வாத்தி ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையம் வைத்தும் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தியும் கல்வி கற்று வந்துள்ளார். இவ்வாறு கல்வி கற்றுவரும் ஆண் மாணவர்களை தன் வலைக்குள் வீழ்த்தி ஓரின பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஒரு ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இது தொடர்பில் பொலீஸ் நிலையத்தில் முறையிடப்பட்ட போதும் பிரதேச செயலத்தில் முறையிடப்பட்ட போதும் உரிய நேரத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது. குறித்த தனியார் வாத்தியாரால் ஆறு ஆண் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த […]