Home Local news 5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

5 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

7

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதற்கமைய , சிவப்பு பருப்பு ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

கோதுமை மாவு ஒரு கிலோகிராம் 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோகிராம் வெள்ளைப்பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 460 ரூபாவாகும்.

அவ்வாறே, ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 190 ரூபாவாகும்.

அதேவேளை உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்,அதன் புதிய விலை 490 ரூபாவாகும் என லங்கா சதொச தெரிவித்துள்ளது.

Previous articleமூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்ற தாய்- வலப்பனையில் சம்பவம்
Next articleமாலைத்தீவுக்கு அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து தொழிலாளர்களிடம் மோசடி.