Home Local news 49 வயதுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை !

49 வயதுடைய பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு 11 வருட கடூழியச் சிறைத்தண்டனை !

10

ஹம்பாந்தோட்டை, படகிரியவில் உள்ள வீடு ஒன்றுக்குள் இரவு நேரத்தில் கூரையை பிரித்து நுழைந்து, 49 வயதுடைய பெண் ஒருவரை வன்புணர்ந்த குற்றவாளி ஒருவருக்கு 11 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், 15,000 ரூபா அபராதமும் விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை, பதகிரிய, யஹங்கல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

22.12.2011 அன்று, பதகிரிய, யஹங்கல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை வழியாக இரவு நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயை பலவந்தமாக துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த பெண் மறுநாள் ஹம்பாந்தோட்டை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியிருந்தனர்.

Previous articleசொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை ஒருவருக்கு 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை !
Next articleமனைவி, மகள் மீது சரமாரி வாள்வெட்டு! தப்பி ஓட முயற்சித்த குடும்பஸ்தரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..