Home Local news 37 வயதான பெண்ணுடன் நிர்வாணமாக விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான வைத்தியசாலை ஊழியர் சடலமாக...

37 வயதான பெண்ணுடன் நிர்வாணமாக விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்பு!

10

37 வயதான பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த சம்பவம் அம்பலாங்கொட – ரந்தொம்பேயில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் 58 வயதுடைய ரத்கமவைச் சேர்ந்த பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் சுகாதார அலுவலக உதவியாளர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவருடன் குறித்த விடுதியில் அறையொன்றில் தங்கியிருந்தபோதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சடலம் கண்டெடுக்கப்படும் போது அவர் நிர்வாணமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் – 01/02/2023, தனுசு ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..
Next articleகல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கி கொள்ளை -மூவர் கைது!