Home CRIME NEWS 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது

10

கென்ய பிரஜையொருவர் 30 கோடி ரூபாய் பெறுமதியான 04 கிலோகிராம் கொக்கெய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவிலிருந்து நேற்று (24) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவர் – கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கட்டார் – தோஹாவுக்கு பயணித்து, பின்னர் கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கைக்கு புறப்பட்டுள்ளார்.

26 வயதான சந்தேக நபரை – இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள், வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவர் வைத்திருந்த 04 கிலோ எடையுள்ள 180 கொக்கெய்ன் சிறு பொதிகள் – அவரின் கைப் பொதிக்குள் இருந்த மூன்று உலோக டின்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக – கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - mutamil News - 24x7 Tamil Breaking News Website 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - mutamil News - 24x7 Tamil Breaking News Website 30 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கெய்னுடன் 26 வயதான நபரொருவர் கைது - mutamil News - 24x7 Tamil Breaking News Website

Previous articleகடற்கரையில் சிசு ஒன்றின் சடலம் மீட்பு – பிரசவித்த குழந்தை இன்றி வீட்டில் கவலைக்கிடமான நிலையில் இருந்த பெண் கைது
Next articleதாய்ப்பால் புரைக்கேறி 3 வயதுக் குழந்தை உயிரிழப்பு – வட்டுக்கோட்டையில் சோகம்!