Home Local news 3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது!

3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது!

11

எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Previous articleகுடும்பத் தகராற்றால் ரயிலை மறித்தவருக்கு ஏற்பட்ட கதி!
Next articleஇரவுநேர இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் காயம்.