Home Local news 23 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் கைது!

23 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் பெண் கைது!

9

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து நேற்று (28) காலை யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 26 வயதான பொலிவியப் பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் நேற்று காலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

கொண்டு வரப்பட்டுள்ள கொக்கெய்ன் கரைசலில் கொக்கெய்ன் போதைப்பொருளின் செறிவு அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுவதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் கையிருப்பு 04 கிலோ 600 கிராம் எடையுடையதுடன் அவற்றின் பெறுமதி 230 மில்லியன் ரூபா அல்லது 23 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக 500 அமெரிக்க டொலர்களை அவர் பெற்றுக்கொள்ளவிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் – 01/03/2023, மேஷ ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்…
Next articleயாழில் மீற்றர் வட்டி கொடூரன் அவா குழு ஜெகனால் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்படும் அப்பாவி