மலர்ந்திருக்கும் 2023ம் ஆண்டு புத்தாண்டு இராசி பலன்கள்!! விசேட ஜோதிடரால் கணிக்கப்பட்டது!!
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – மேஷம் ராசியினருக்கு எப்படி?
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் ராகு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – சப்தம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் ராசியில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி உங்கள் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். நீங்கள் செய்யும் வேலையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதன்மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
உடல்நலனில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முடிவுகள் தெளிவாக இருக்கும். செய்யும் செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சந்தான பாக்கியம் இந்த வருடம் கண்டிப்பாக கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சாதகமான போக்கு காணப்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அதிக ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள்.
தொழிலில் மேன்மை உண்டாகும். தனலாபம் உயரவும் வாய்ப்புண்டு. வியாபாரிகள் கணிசமான லாபம் பெற இயலும். மகசூல், கொடுக்கல் – வாங்கல் போன்றவற்றில் குறை உண்டாகாது. அதிகச் செலவுக்கு இடமுண்டு. ஆனால் அதனை சாமர்த்தியமாக சமாளிக்க வழி உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு, ஒரு முக்கியப் பிரச்சினையில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டிய கட்டம் உருவாகலாம். அரசாங்க காரியங்களில் எந்த ஆதாயத்தையும் முயற்சி செய்து பெறலாம். கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் செவ்வனே நிறைவேறத்தடையில்லை. பொதுவாக அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சம் நன்றாக இருக்கும்.
பெண்களுக்கு உங்களுடைய வாழ்வு உன்னதமாக அமைய இந்த காலகட்டம் உதவும். குடும்பத்தில் திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க இடமுண்டு. மாணவர்கள் புகழுடன் பொருளும் பெறுவர். வித்தைகளில் தேர்ச்சி உண்டாகும். தொலைதூரச் செய்தி நற்செய்தியாக இருக்கும்.
அஸ்வினி: இந்த ஆண்டு தகுதிவாய்ந்தவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் பணி சரிவர இருந்து வரும். அன்றாட காரியங்கள் செவ்வனே நடைபெறும். கற்றறிந்த மேலோருக்குக் குறை ஏதும் உண்டாகாது.
உங்களுடைய உயர்ந்த குணத்தால் அந்தஸ்து சிறப்பாக அமையும். தேவையில்லாமல் மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். திருமணம் போன்ற நற்காரியங்களும் நடக்க வாய்ப்புண்டு. பெரியோர்களது நல்லாசியை விரும்பிப்பெறுங்கள். சத்ருவினால் ஓரிரு சங்கடங்கள் உருவாகலாம். உடல் நலமும் சற்று பாதிக்கப்படலாம்.
பரணி: இந்த ஆண்டு வியபாரிகளுக்கு அளவான லாபம் நிச்சயம் உண்டு. பொருளாதார சுபிட்சம் குறைவுபடாது. பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் ஒரு பிரச்சினை குறித்து சற்று மனத்தாங்கல் ஏற்படலாம். எனினும் அது தானாகவே சரியாகிவிடும். எந்தவிதமான குறுக்கு வழியிலும் நிலைமையைச் சமாளிக்க முயலாதீர்கள். பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடந்து கொள்வது அவசியம். அன்றாடப் பிரச்சினைகள் தடங்கலின்றி நிறைவேற வாய்ப்பு கிடைக்கும். திட்டமிட்டு செலவு செய்தால் பணக்கஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
கிருத்திகை 1ம் பாதம்: இந்த ஆண்டு சங்கடங்கள் சற்றுமட்டுப்பட வாய்ப்புண்டு. பொருளாதார சுபிட்சம் பாதிக்கப்படாது. அன்றாட வாழ்வு நலமுடன் நிகழத்தடையிருக்காது. தொழிலிலோ, வியாபாரத்திலோ புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகளுக்குப் ஏதேனும் வில்லங்கம் ஏற்படலாம்.
கவனமுடன் இருப்பது அவசியம். உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளோர் மிக்கப் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நேரம் இது. இல்லையேல் பழிச்சொல் வர நேரலாம். பெரியோர்களின் சகவாசத்தை விரும்பிப்பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். தொல்லை குறையும்.
பரிகாரம்: முடிந்த வரை செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – ரிஷபம் ராசியினருக்கு எப்படி?
ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் செவ்வாய் (வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – லாப ஸ்தானத்தில் குரு – விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று தொழில் ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதிய முயற்சிகள் எதிர்பார்த்தபடி நடக்கும். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோர் கவுரவிக்கப்படுவர். தாயாரின் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உண்டாகும்.
பொதுவாக எவ்வளவு தான் சங்கடங்கள் ஏற்படுமானாலும் உங்கள் அந்தஸ்துக்கும் குந்தகம் ஏற்படாது. எந்தச்சங்கடங்களையும் சமாளிக்கும் ஆற்றலுக்கும் பஞ்சமிராது. பணக்கஷ்டம் உருவாக இடமில்லை. ஆனால், சிலர் விஷயத்தில் மனக்கஷ்டம் உருவாக இடமுண்டு. எனவே கவனமுடன் பேசுவது அவசியம்.
திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. தெய்வபலம் சிறப்பாக இருப்பதால் எல்லாமே சீராக அமைய வாய்ப்புண்டு. பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு பணி நிரந்தரம் கிடைக்கவும் இடமுண்டு. வேலை இல்லாதோருக்கு அதற்கான வேளை கனிந்து வரும். திடீர் பொருள் வரவுக்கும் வாய்ப்புண்டு. அதே போல் திடீர் செலவுக்கும் இடமுண்டு.
வியாபாரிகளுக்கு அலைச்சல் தவிர்க்க முடியாமல் போகலாம். நல்ல லாபம் பெறுவதற்கு அரும்பாடுபட வேண்டியிருக்கும். இதனால் அதிருப்தி ஏற்படலாம். கவலை வேண்டாம். உங்களின் விடா முயற்சியால் நீங்கள் உங்கள் வெற்றியை அடைவீர்கள். புதிய வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். இதனால் உங்கள் தொழில் விரிவடையும்.
அரசியல்வாதிகளுக்கு முன்விரோதம் காரணமாக சிறு தொந்தரவுகள் உண்டாகவும் இடமுண்டு. அரசாங்க விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். நேர்மையாகவும், கவனமுடனும் நடந்து கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
கலைத்துறை சுறுசுறுப்படையும். தினசரி பணிகளை மட்டும் செய்து வாருங்கள். அன்றாட வாழ்வு நலம் பாதிக்காது. பிரச்சினை ஏதும் உருவாக இடமில்லை. ஓரிரு நன்மைகள் உண்டாக வழியுண்டு. மற்றப்படிக்குப் பலவிதமான சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய காலம் இது.
பெண்கள் ‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்றிருப்பது அவசியம். தாயாரின் நலனில் அக்கறைச் செலுத்தவேண்டியது அவசியம். தங்களுடைய நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருக்கவேண்டும். இல்லையேல் பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டிய நிலை உண்டாகலாம். மாணவர்கள் கல்விப்பயனைச் சீராகப்பெற தடையில்லை. பொறியியல் துறை, விவசாயத்துறை போன்றவற்றில் புதிய முயற்சிகள் இப்போது கைகொடுக்கும்.
கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வேலைகள் தடங்கலின்றி நடக்க வாய்ப்புண்டு. முதலாளி – தொழிலாளி உறவு சலசலப்புக்குள்ளாகலாம். விவசாயிகளுக்கு கஷ்டம் ஏதும் உருவாகாது. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.
விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் சிறு சிறு கஷ்டங்கள் எந்த உருவிலாவது வரலாம். சமாளித்து விடுவீர்கள். கவலை வேண்டாம். கற்றறிந்த மேலோருக்கு உரிய கவுரவம் கிடைக்கத் தடையிருக்காது. காதல் விவகாரம் தற்போது வேண்டாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கடிதப்போக்குவரத்தில் கண்ணியம் காப்பது அவசியம்.
ரோகினி: இந்த ஆண்டு பல கஷ்டங்களும் உண்டாகும். ஆனால் இந்தக் கஷ்டங்களை குரு அருளால் நீங்கள் இலகுவாக சமாளிக்கவும் இயலும். கொடுக்கல் – வாங்கலில் நிதானம் இருக்கட்டும். விவசாயிகளுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு வழக்கு ஏற்படலாம். இதனை சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயலுங்கள்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. பொறியியல், விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்கு உற்சாகம் தரக்கூடிய நேரமாக இருக்கும். கலைத்துறையில் சாதகமான போக்கு காணப்படும். இயந்திரத் தொழிலில் சம்பந்தமுடையோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்: இந்த ஆண்டு கலைத்துறைச் சம்பந்தப்பட்ட பணிகளில் அவ்வப்போது சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டு பிறகு சீரடைய வாய்ப்புண்டு. பொருளாதார சங்கடம் இருக்காது. இயந்திரப் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்றம் ஏற்படும். காவல் – ராணுவத்தினருக்கு ஆதாயம் உண்டு.
நண்பர்கள் நல்லவர்களை இனம்கண்டு பழகினால் தொல்லை இராது. விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கலைத்துறையில் கலகலப்பான சூழ்நிலை உருவாகுமானாலும் சங்கடங்களும் இருந்து வரும். பொதுவாக பணக்கஷ்டம் அந்தஸ்துக் குறைவு போன்றவை ஏற்படாது. குடும்பத்தில் லஷ்மிகரம் நிலைத்திருக்கும்.
பரிகாரம்: முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – மிதுனம் ராசியினருக்கு எப்படி?
மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது – சப்தம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – தொழில் ஸ்தானத்தில் குரு – லாப ஸ்தானத்தில் ராகு – விரைய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று பாக்கிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: புதனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு நன்மையும் தீமையும் கலந்தவாறு நடக்கவே வாய்ப்புண்டு. குறிப்பாக நன்மைகளில் திடீர் பொருள் வரவுக்கு இடமுண்டு. தீமைகளில் நண்பர் ஒருவர் விரோதி ஆகலாம். பொதுவாக சுபிட்சம் உண்டு.
தொழில் சிறப்படையும், நிலபுலன்கள் விஷயத்தில் ஆதாயம் காணலாம். தெய்வ பலம் நல்லவிதமாக அமைந்துள்ள இந்த நேரத்தில் தெய்வப்பணி, தருமப்பணி போன்ற சத்காரியங்களில் ஈடுபட்டு மனம் மகிழ வாய்ப்புண்டு. குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். உறவினர்கள் வருகையும் இருக்கும். சுப காரியங்கள் நன்றாக நடக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு. பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம். மேலதிகாரிகளின் உள்ளம் குளிர நடந்து கொண்டால் தீமை குறையும். உழைப்பாளிகளுக்கு உரிய கவுரவம் கிட்டும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு. உபத்திரவம் ஏதும் உண்டாகாது. தொழிலில் மேன்மை உண்டாகும். தொழிலாளர்களுக்கும் ஆதாயமான சூழ்நிலை உருவாகும். விவசாயிகளுக்கு மகசூல் மகிழச்சி தரும்.
அரசியல்வாதிகள் அவசரப்படாமல் நடந்து கொள்வது நல்லது. வேண்டிய நண்பர் ஒருவர் மனஸ்தாபத்துக்கு உள்ளாக நேரலாம். பெருந்தன்மையோடு நடந்து கொண்டு அந்தப்பிரச்சினையைச் சமாளிக்க வேண்டியது அவசியம். கலைத்துறையில் சீரான போக்குக்குத் தடை உண்டாகாது. எந்தப் புதுமுயற்சியும் வெற்றியை நோக்கியே செல்லும். அன்றாட பணிகளை மட்டும் சிரத்தையோடு செய்து வாருங்கள். அன்றாட வாழ்க்கையின் தேவைகள் பூர்த்தியாகத் தடையிராது.
பெண்கள் எதிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம். வரவு அறிந்து செலவு செய்தால் பணக்கஷ்டம் உண்டாக வாய்ப்பில்லை. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது ஓர் அமைப்பு காக்கும். மாணவர்களில் பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற துறைகளில் உள்ளோருக்குப் புதிய சாதனைக்கான முயற்சிகள் கை கூடிவரும். கல்விப்பயனை மிகுந்த பிரயாசைப்பட்டேனும் பெற்று விடுவர். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. தொழிலில் மந்த நிலை இருந்தாலும் அதை சமாளித்து விடுவீர்கள். விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல் சரியாகும்.
பொருளாதாரத்தில் தொல்லை ஏற்படாது. பணக்கஷ்டம் வராமல் இருக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாட பணிகள் சரிவர நடக்கும். தெய்வ வழிபாடு மனத்துக்குத் தெம்பு தரும். அரசு உத்தியோகஸ்தர்கள் விரும்பத்தக்க உத்தரவுகளைப் பெறலாம். அரசாங்க காரியங்களில் தாமதம் தவிர்க்க முடியாமல் போகலாம்.
திருவாதிரை: இந்த ஆண்டு உடல் நலம் சிறிது பாதிக்கப்படலாம். தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தங்கள் நற்பெயரைக் காத்துக் கொள்வதில் மிக்க கவனமாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். நற்பலன்கள் அதிகளவில் நடக்கும் என்றாலும், சிறிதளவு மனசங்கடங்கள் உண்டாக வாய்ப்புண்டு. பொருளாதாரக் குறை உண்டாகாது. அந்தஸ்து பாதிக்கப்படாது. குடும்பத்தில் சுபகாரியம் நடக்கலாம். வேலை இல்லாதோருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு உங்களுடைய வாழ்வில் சில நற்பலன்கள் ஏற்பட்டே தீரும். அந்த நன்மைகளை நேர்வழியில் சென்றே உங்களால் பெற முடியும் என்பதால் குறுக்கு வழியில் முயற்சிக்கும் எண்ணத்தைக் கைவிடுங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு ஒரு சறுக்கல் ஏற்படுமானாலும் நிமிர்ந்து விடுவார்கள். விவசாயிகளுக்கு உன்னதமான நேரம் இல்லை என்றாலும் உபத்திரவம் பெரிதாக உருவாகாது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உற்சாகம் உண்டாகும்.
பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – கடகம் ராசியினருக்கு எப்படி?
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை – சுக ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் ராகு – லாப ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள் நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது. உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள்.
குறுக்கு வழியில் பிரவேசிக்காதீர்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஏற்படவும் ஓர் அமைப்பு முனைந்து நிற்பதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.
உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். எனினும் அன்றாட பணிகள் சரிவர நடக்கும். அளவான வருமானம் வர தடை இருக்காது. முன்விரோதம் காரணமாக சிக்கல் ஏற்படலாம்.
அதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம். விவசாயிகளுக்கு வீண் பிரச்சினை ஒன்று உருவாகலாம். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.
அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள். நிதானம் தேவை. எந்த பிரச்சினையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள். நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு.
செலவில் சில விரயமானதாகவும் இருக்கக் கூடும். கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு. பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது. ஆனால், அதிகப்படியான செலவு உண்டாகலாம். டெக்னீஷியன்களுக்கு கவுரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள். மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையில் உள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு. உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த ஆண்டு இயந்திரப் பணி சம்பந்தப்பட்ட தொழில், வியாபாரம் ஓரளவுக்கு உற்சாகம் தரும்படி அமையும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரத் தடை உருவாகாது. விவசாயிகளுக்கு பிரச்சினைகள் அதிகமில்லை. பணிகள் சரிவர நடக்கும். கலைத்துறை பாதிக்கப்படாது. எழுத்தாளர்களுக்கு பிரச்சினை இராது. இந்த நேரத்தில் தெய்வ வழிபாடு புரிந்து வருவது நல்லது.
பூசம்: இந்த ஆண்டு கலைத்துறை சிறப்படையும். மக்கள் நலம் நல்லவிதமாக இருக்கும். திருமண முயற்சிகள் கூடிவரும். வியாபாரிகள் கவனக் குறைவால் எந்தத் தவறையும் செய்யாதிருப்பதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு தேவையான பண வரவு இருக்கும். கலைத்துறை சிறப்படையும். தெய்வப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் மனம் அமைதி அடையும்.
ஆயில்யம்: இந்த ஆண்டு ஏற்படும் தொல்லைகளில் இருந்து நன்மைகள் உண்டாகும். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு பாதகமில்லை. தொழிலாளர்கள் எச்சரிக்கையாகப் பணியாற்றுவது அவசியம். மனக்கவலை இருக்கும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு சிறு சோதனை உண்டாகலாம். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும். அரசு அலுவலர்களுக்கு பணிகளில் போதிய திருப்தி கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – சிம்மம் ராசியினருக்கு எப்படி?
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை – தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு – பாக்கிய ஸ்தானத்தில் ராகு – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று சப்தம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பலன்கள்: சூரியனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு புதுமுயற்சிகளில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகளில் வெற்றி முகம் காண்பதற்குரிய சூழ்நிலையும் கனிந்து வரும். பொருளாதார சுபிட்சம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.
தாம்பத்திய சுகம் நல்ல விதமாக அமையும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. உங்களுடைய அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். புதிய முயற்சிகளை தேவையறிந்து செய்யவும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டியும் வரலாம். பயணத் தைத் தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினை உருவாக வாய்ப்பில்லை. ஆனால் எதிர்பார்த்த முன்னேற்றம் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும். பெரிய நிறுவன நிர்வாகிகளுக்கும் – தொழிலாளர்களுக்கும் நல்லிணக்கம் உண்டாகி ஸ்தாபன வளர்ச்சி இருக்கும்.
வியாபாரிகள் நல்ல லாபம் பெறுவர். விவசாயிகள் மகிழ்ச்சி அடைவர். மருத்துவர்களுக்கு நல்ல செல்வாக்கு உருவாகும். இயந்திரப்பணி தான் சற்று சிக்கல் தரும். மிகுந்த அலைச்சல் உண்டாகும். அதற்கேற்ற லாபம் கிடைக்கும். வேலைகளை முடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருக்கும்.
அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர். அரசாங்க காரியங்களும் துரிதமுடன் நடைபெற வாய்ப்புண்டு. உடல்நலம், குடும்பநலம் பொருளாதார நலம் எல்லாமே சிறப்பாக அமையும். சில தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் ஏற்படவும் வாய்ப்புண்டு.
கலைத்துறை நல்ல விதமாக அமையும். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப் படுவர். கணிசமான பொருள் பாக்கியமும் பெற இடமுண்டு. பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம். உங்களுடைய அந்தஸ்து சிறப்பாக இருக்கும். பொருளாதார சுபிட்சமும் சீராகவே இருக்கும்.
பெண்களுக்கு உற்றார் உறவினர் வருகையும், அதனால் மகிழ்ச்சியும் உண்டு. குறிப்பாக திருமண ஏற்பாடு கைகூடி வர வாய்ப்புண்டு. பெற்றோரால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் நலம் காண்பர். மாணவர்களுக்கு ஆசிரியர் உறவு மகோன்னதமாக விளங்கும். கல்விப் பயனைப் பெறுவதில் இடையூறு இருக்கலாம். எனினும் அதனை சிறப்பாக கையாண்டு வெற்றி காண்பீர்கள்.
மகம்: இந்த ஆண்டு சற்று சுறுசுறுப்பு குறையலாம். விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் லாபம் உண்டாகலாம். வியாபாரிகளுக்கு நஷ்டம் இருந்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வளர்ச்சி இருக்கும். உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். வீடு, நிலம் போன்ற இனங்களில் வழக்கு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ள முயல்வது நல்லது. இயந்திரத்தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு ஏற்றம் உண்டாகும்.
பூரம்: இந்த ஆண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். விவசாயிகளுக்கு உற்சாகமாக இருக்கும். கொடுக்கல் – வாங்கல் திருப்தி தரும். நில புலன்களில் ஆதாயம் காணலாம். வியாபாரிகளுக்கு அளவான லாபம் இருக்கும். கவலை வேண்டாம். மகிழ்ச்சி உண்டு, கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் ஏற்றம் பெறுவர். கலைத்துறையினருக்கு சிறப்பாக இருக்கும். கணவன் – மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த ஆண்டு அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிட்டும். வியாபாரிகளுக்கு இரட்டிப்பு லாபம் வருவதற்கு கிரக அமைப்பு உதவக்கூடும். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது.
வழக்குகளில் வெற்றி வாய்ப்பு பெறவும் ஆதாய சூழ்நிலை உண்டு. இயந்திரப்பணி புரிவோருக்கு ஒரு சிக்கல் உருவாகலாம். இரும்பு, பித்தளை போன்ற உலோகத் தொடர்புடையவர்களுக்கு ஓரிரு பிரச்சினைகள் உருவாகலாம். சனி பகவானைத் தொழுது வந்தால் தொல்லை குறையும்.
பரிகாரம்: ஞாயிறுதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – கன்னி ராசியினருக்கு எப்படி?
கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – சப்தம ஸ்தானத்தில் குரு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்: புதனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர்களின் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள்.
குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு. எனினும் சான்றோரை சந்தித்து வாருங்கள். உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள். கணவன் – மனைவி உறவு கெட இடமில்லை. துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு. உத்தரவைப் பெற பொறுமை காப்பது அவசியம். பொருளாதாரச் சங்கடம் உருவாகாது. அன்றாடப் பணிகளில் குந்தகம் விளையாது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர் நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு. நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை. மெத்தப் படித்த மேலோர் சமூகத்தில் உரிய மரியாதையுடன் நடத்தப்படுவதோடு, கணிசமான பொருளும் பெற்றும்
கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் அன்றாடப் பணி தொய்வின்றி நடக்க வாய்ப்புண்டு. எழுத்தாளர்களுக்கு உரிய வாய்ப்பு கிட்டும். கொடுக்கல் – வாங் கலில் நிதானம் இருக்கட்டும்.
அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு. பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது. உழைப்பு வீண் போனது போலத் தோன்றலாம். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்ப சுபிட்சம், தாம்பத்திய உறவு சீராக இருக்கும். சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும். மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஏற்றம் பெறுவர். உடல் நலம் நல்லவிதமாக இருக்கும். மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காம் இருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள், கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும் முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.
அஸ்தம்: இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல்பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் – ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும்.
விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத்துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – துலாம் ராசியினருக்கு எப்படி?
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் கேது – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – சப்தம ஸ்தானத்தில் ராகு – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப நலம் சீராக இருக்கும். சங்கடங்களைச் சமாளிக்கக்கூடிய துணிவு பிறக்கும். பொருளாதார நிலையில் கெடுதல் ஏற்படாமலும் காப்பாற்றப்படுவீர்கள்.
இந்த நற்பலன்கள் ஏற்படுவது உறுதி. இதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அலைச்சலும் தவிர்க்க முடியாமல் போகும். உடல்நலம் பாதிக்கப்பட இடமுண்டு, கவனம் தேவை. உறவினர்கள் மூலம் ஏதேனும் தொல்லை உண்டாகலாம்.
அதையும் சமாளித்து விடுவீர்கள், கவலை வேண்டாம். பணச்சங்கடம் வராமல் இருக்க வாய்ப்புண்டு. பெரியோர்களின் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். தெய்வப்பணி, தருமப்பணிகளில் ஈடுபட்டு வந்தால் கவலை குறையும்.
உத்தியோகத்தில் தெம்பும், தைரியமும் அதிகம் ஏற்படும். இயந்திரப் பணியில் ஈடுபட்டுள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோருக்குக் குறை உண்டாகாது. நன்மையும், தீமையும் கலந்தவாறு நடக்கும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. அலைச்சல் தவிர்க்க முடியாமல் போகலாம். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் எந்த வில்லங்கமும் வராமல் காத்துக்கொள்ளலாம். மருத்துவர்கள், பொறியியல்துறை வல்லுநர்கள் புதிய முயற்சியில் ஈடுபடலாம்.
அரசியல்வாதிகளுக்குச் சோதனை ஏற்படலாம். மனத்துக்கு மிகுந்த சங்கடம் உண்டாகக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம். ஆனால் எதையும் துணிவோடு சந்திக்கும் ஆற்றல் ஏற்படவும் இடமுண்டு. தெய்வ காரியங்களில் ஈடுபட்டு வந்தால் தொல்லை குறையும்.
கலைத்துறை நல்லவிதமாக நடக்கும். எதிர்த்துப் போராடி சிற்சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். பொதுவாக அலைச்சலும், கடும் உழைப்பும் தவிர்க்க முடியாத நேரம்தான் இது. துணிவுடன் எதையும் எதிர் நோக்கம் ஆற்றல் இருக்கும்.
பெண்களுக்கு கணவன் – மனைவி உறவு களிப்புடன் விளங்கும். சொந்தபந்தங்களால் ஏதேனும் பிரச்சினை உண்டாகலாம். கவனமாக இருங்கள். உங்களுடைய கவுரவம், ஓங்கும். பொருளாதார வளர்ச்சி குடும்ப நலம், தொழில் வளம், பதவி உயர்வு போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
மாணவர்கள் அளந்து பேசினால் நன்மை பெருகும். நற்காரியங்களை உத்தேசித்து நல்ல மனதோடு அணுகும் விஷயங்களில் வெற்றி உண்டாகும். புதிய சிநேகிதம், புதியவர்களுடன் எந்தவிதத்திலும் தொடர்பு கொள்வது போன்றவற்றை அறவே நீக்கவேண்டும். மீறினால் ஏமாற்றப்படுவீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு தொழிலில் மிகுந்த அக்கறையுடன் இருப்பது அவசியம். வியாபாரிகளுக்குப் அனுகூலமாக இருக்கும். வியாபாரிகளுக்கு சிறு நஷ்டம் இருக்குமானாலும் பின்னர் ஆதாயமாக இருக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டாகாது.
கலைத்துறை சம்பந்தப்பட்ட நபர்களுக்கும் பிரச்சினைகள் உருவாகாது போக இடமுண்டு. உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். மனதில் சில குறை உண்டாகலாம். அதை சரி செய்து விடுவீர்கள். பணக்கஷ்டம் இருக்காது. ஆனால், உழைப்பு அதிகமாக இருக்கும். அலைச்சல் இருக்கும்
சுவாதி: இந்த ஆண்டு உடல்நலம் சீராக இருக்கும். மிகவும் உன்னதமான நேரம் நடந்து கொண்டிருக்கிறது. திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் உண்டாகலாம்.
வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இழிச்சொல்லுக்கு உள்ளாக நேரலாம். எச்சரிக்கை தேவை.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு தம்பதியரிடையே மகிழ்ச்சி மேலோங்கும். தகாத காரியங்களைச் செய்யச் சொல்லி உங்களைத் தடுமாற்றத்துக்கு உள்ளாக்கும் நிலைமை வரலாம் எச்சரிக்கை. அன்றாடப் பணிகளில் சிரத்தையுடன் செயலாற்றுங்கள். தப்பித்துக் கொள்ளலாம்.
தொழிலாளர்களுக்கு விசேஷ நற்பலன்கள் உண்டாகும். திருமணம் போன்ற நற்காரியங்கள் நிகழவும் வாய்ப்புண்டு. கலைத்துறை சம்பந்தப்பட்ட பணிகள் சுறுசுறுப்படையும். கணவன் மனைவி உறவு களிப்புடன் விளங்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் குலதெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – விருச்சிகம் ராசியினருக்கு எப்படி?
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு – சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – விரைய ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று சுக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகள் விளையக்கூடிய நேரம் இது. தகுதி வாய்ந்தவர்கள் பாராட்டப்படுவார்கள். உங்களுடைய ஆதாயமான நிலைக்கு அடிகோலும் விதமாக சில காரியங்கள் நடக்கும்.
புதிய சகவாசத்தை புறக்கணியுங்கள், செல்வாக்கு அதிகமாகும். செல்வம் சேரும். பழைய பாக்கி வசூலாகும். குடும்பத்தில் திருமணம், மகப்பேறு போன்ற பாக்கியங்கள் ஏற்படலாம். பதவி உயர்வு கிட்டும். உடல் நலனை கவனிக்கவும். குடும்பநலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக அமையும்.
வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும். தப்பித் தவறியும் தவறான செய்கைக்கு இடம் கொடுத்தால் இழிநிலை உண்டாகும். கடன் தொல்லை இருக்குமாதலால் சமாதானமுறையில் பேசி சமாளிக்க வேண்டியது அவசியம்.
உத்தியோகஸ்தர்களுக்கு முன்விரோதம் காரணமாக ஒரு சச்சரவு உண்டாகலாம். அதை பொறுமையுடன் சமாளித்தால் வெற்றி நிச்சயம். விரும்பிய பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். கவலை வேண்டாம். முதலாளி – தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும்.
வியாபாரிகள் இரட்டிப்பு லாபம் காணவும் வாய்ப்புண்டு. வில்லங்கம் ஏதும் உருவாகாது. தொழில் சிறப்படையும். தொழிலில், வியாபாரத்தில், விவசாயத்தில் எதிராளியின் தொல்லை காணாமல் போகும். வியாபாரிகளுக்கு நஷ்டம் தவிர்க்க முடியாமல் போகலாம். எனினும் அதை சமாளிக்கும் சூழ்நிலையும் உருவாகும்.
அரசியல்வாதிகள் பாராட்டுப் பெறுவார்கள். கற்றறிந்த மேலோர் கௌரவிக்கப்படுவர். மிகவும் நெருக்கடியான உருவானாலும் அதை எச்சரிக்கையுடன் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். பலவிதமான சங்கடங்கள் தோன்றினாலும் உண்மைத் தொண்டர்களின் உதவியுடன் அதை சமாளிப்பீர்கள்.
கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். தொழிலில் ஏற்றமும், தொழிலாளர்களுக்கு சந்தோஷமும் உண்டாகும். கற்றறிந்த வல்லுநர்களுக்கு உரிய கௌரவம் கிடைக்கத் தடை இருக்காது. விருதுகள், பாராட்டுகள் கிடைக்கும். உங்கள் உழைப்பு அறியப்படும்.
பெண்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்படலாம். உடல் நலம்கூட பாதிக்கப்பட இடமுண்டு. குறுக்குவழியில் ஈடுபடாதீர்கள். பெரியோர்களின் நல்லாசியைப் பெறுவதில் குறியாயிருங்கள். தெய்வ சிந்தனையோடு இருங்கள்.
மாணவர்களுக்கு சோதனை மிகுந்து காணப்படும் நேரம் ஆதலால் பொறுமையுடன் இருங்கள். பெரியோர்கள் ஆலோசனையின்படி நடக்கக் கற்றுக் கொள்ளுங்கள். கல்வியில் மட்டும் கவனம் செலுத்தினால் தொல்லை குறையும்.
விசாகம் 4 ம் பாதம்: இந்த ஆண்டு கடன் தொல்லை தீரும். முன்விரோதம் காரணமாக இருந்துவந்த சில சிக்கல்கள் தீரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் உண்டாகும். உடல் நலம் முன்னேற்றமடையும். பொதுவாகச் சங்கடங்கள் பல ஏற்படுமானாலும், அதனைச் சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும்.
கொடுக்கல் – வாங்கல் சீராக இருக்கும். குடும்ப நலனில் அக்கறை செலுத்துங்கள். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்குப் பிரச்சினை உண்டு. பொறுமையுடன் நடந்து கொண்டு, சமாளிக்க
வேண்டியது அவசியம். தொழிலாளர்கள் பணிபுரியும்போது கவனமாக இருப்பது அவசியம்.
அனுஷம்: இந்த ஆண்டு நற்பலன்களும், தீய பலன்களும் கலந்தவாறு இருந்துவரும். இருந்தாலும் எதையும் சமாளிக்கக் கூடிய வகையிலேயே தொல்லைகளின் தன்மை இருந்து வரும். மனம்தான் சற்று சஞ்சலத்துக்கு உட்பட நேரும்.
தெய்வப்பணிகளில் ஈடுபட்டு மனோதிடம் பெறமுயலுங்கள். அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருந்தால் அவப்பெயரிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் தோன்றலாம். சாமர்த்தியமாக அவற்றை சமாளிக்க வேண்டியிருக்கும். பொருளாதார நிலையில் சரிவு ஏற்பட இடமில்லை.
கேட்டை: இந்த ஆண்டு நன்மைகள் உண்டாக வாய்ப்புண்டு. பொதுவாக சில சங்கடங்கள் இருக்கும். பெரிய மனதோடும் தெய்வபக்தியோடும் இருந்து அவற்றைச் சமாளிக்கவும். மனத்தை மட்டும் தளரவிடாதீர்கள், அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை இருக்காது என்றாலும் ஒருவிதமான பீதி இருந்து வரும்.
சாமர்த்தியமாக நடந்து கொண்டால் அரசியல்வாதிகள் அவமானப் படக்கூடிய நிலையிலிருந்து தப்பிக்கலாம். குடும்பத்தில் சச்சரவுக்கு இடம் அளிக்காதீர்கள். வியாபாரிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது. செய்யும் தொழிலில் சிக்கல் வராது. கொடுக்கல்-வாங்கலில் நிதானம்தேவை.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – தனுசு ராசியினருக்கு எப்படி?
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை – ராசியில் சூரியன், புதன்(வ) – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி – சுக ஸ்தானத்தில் குரு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பலன்கள்: குருவை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார நிலையில் எந்த சிக்கலும் வராது. அன்றாடப் பணிகள் நிறைவேறும். ஆனால், அதற்காக அதிகப்படியாக உழைக்க வேண்டியிருக்கும்.
பெரியோர்களகது நல்லாசியைப் பெற்று வாருங்கள். தருமப்பணிகளில் ஈடுபட்டு வாருங்கள். உங்களுடைய வாழ்வில் உன்னத நிலை அடையக் கூடிய சந்தர்ப்பங்கள் கனிந்து வரும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு உண்டாகும். பணம் சேரும். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் பயன் உண்டாகவும் வாய்ப்புண்டு.
குடும்ப சுபிட்சம் சீராக இருக்கும். செல்வ நிலை, குடும்ப சுபிட்சம், தாம்பத்திய மகிழ்ச்சி எல்லாம் சீராக இருக்கும். கணவன் – மனைவியரிடையே கருத்து வேற்றுமை எழ இடம் தராதீர்கள். பிள்ளைகளை சற்று கவனமுடன் கண்காணிப்பது அவசியம்.
உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்துக் கண்டிக்க நேரலாம். நண்பர்களில் நல்லவர்களை இனம் கண்டு பழகினால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிகுந்த எச்சரிக்கையுடன் கடமையாற்ற வேண்டியிருக்கும்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைபடாது. விவசாயிகளுக்குப் பிரச்சினை ஏதும் உருவாகாது. உபத்திரவம் அவ்வளவாக இருக்காது. இயந்திரத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருந்தால் தொல்லை இல்லை. ஆதாயம் ஏற்பட இடமுண்டு. தொழில்கள் மேன்மையடையும். முதலாளி – தொழிலாளி உறவு பலப்படும்.
அரசியல்வாதிகள் அவசரப்படாமல் காரியம் செய்து நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பல விதமான நற்பலன்கள் ஏற்படக் கூடிய நிலை உண்டென்றாலும், அந்த நன்மைகளைப் பெறுவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கும்.
கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். உழைப்பாளிகளுக்குச் சோதனை இருக்காது. என்றாலும் கடுமையாக உழைத்து உரிய வருவாயை பெற வேண்டியிருக்கும். ஓரிரு சங்கடங்கள் ஏற்படுமானாலும், சாமர்த்தியமாக அதனைச் சமாளிக்கக் கூடிய வழியும் புலப்படும்.
பெண்களுக்கு கவுரவம் ஓங்கும். புகழ் கிடைக்கும். பணக் கஷ்டம் உண்டாகாது. முயற்சிகள் தீவிரம் அடையும். சுறுசுறுப்போடு இயங்கக் கூடிய உங்களை, சில தீய நண்பர்கள் திசை திருப்பி விட நேரலாம். நல்லவர்களை இனம் கண்டு இயங்குங்கள். பெரியோர் நல்லாசியைப் பெறுங்கள்
மூலம்: இந்த ஆண்டு தொழிலில் தொய்வு உண்டாகாமல் காக்கும். வியாபாரிகளுக்குப் லாபகரமாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல லாபம் வரும். மகசூல் திருப்தி தரும். மருத்துவர்கள் புகழ் பெறுவர். முதலாளி – தொழிலாளி உறவில் சிக்கல் உண்டாகாது என்றாலும் சலசலப்பு ஏற்பட இடம் தரவேண்டாம். குடும்ப விஷயங்கள் எல்லாம் சீராக அமையும். நற்பலன்கள் விளைவதில் ஒரு கட்டுப்பாடு இருக்கவே செய்யும். குறிப்பாக யாரிடமும் தகராறு செய்யாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
பூராடம்: இந்த ஆண்டு உடல் நலனில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை இருப்பதால் கண் வலி, நரம்புத் தளர்ச்சி போன்ற உபாதைகளுக்கு உள்ளாக நேரலாம். எனவே நேரம் பார்த்து உணவு உட்கொள்வதும், ஓய்வு எடுப்பதும் அவசியம். கலை, கல்வித்துறைப்பணிகள் மேலோங்கும். அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது. பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்ப சுபிட்சம் நல்லவிதமாகவே இருக்கும். அளந்து பேசுவது மிகவும் அவசியம். அவசரப்படாமல் இருப்பதும் அவசியம்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த ஆண்டு யாரிடமும் மனஸ்தாபம் வராமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உண்டு. அதனால் நற்பலனும் உண்டாகும். உடல் நலம் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் பிறகு பூரண குணம் பெறும். எது எப்படியிருந்தாலும் அன்றாட வாழ்வில் சுபிட்சம் பாதிக்கப்படாது.
கலை, கல்வி சம்பந்தப்பட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்குப் புகழ் கிடைக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் முதலியவர்களுக்கு ஏற்றம் உண்டு. லாபமும் இருக்கவே செய்யும். குடும்ப நலம், தாம்பத்திய சுகம் எல்லாம் சீராக இருக்கும்.
பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – மகரம் ராசியினருக்கு எப்படி?
மகரம் ( உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை – ராசியில் சுக்கிரன், சனி – தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு – சுக ஸ்தானத்தில் ராகு – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது – விரைய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) என கிரகநிலை இருக்கிறது.
கிரக மாற்றங்கள்: 29-03-2023 அன்று ராசியில் இருந்து சனி பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சனியை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு உங்களுடைய கவுரவத்திற்கு ஊறு நேராது. அன்றாடப் பணிகளில் தொய்வு உண்டாகாது. கடுமையாக உழைக்க வேண்டி வரும். அதனால் பயனும் உண்டாகும். நண்பர்களிடமோ, தொழில் சம்பந்தப்பட்ட வகையிலோ, வியாபார ரீதியாகவோ யாரிடமும் தகராறு வரும்படி நடந்து கொள்ளாதீர்கள்.
உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். பொருளாதார நிலை பாதிக்கப்படாது. கணவன்- மனைவி உறவு களிப்புடன் விளங்கும். உறவினர்களால் ஏற்படும் தொல்லைகளில் ஒரு கட்டுப்பாடு இருக்க இடமுண்டு. பொதுவாக நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. குறிப்பாக புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியாதபடி நிலைமை உருவாகலாம், எச்சரிக்கை.
உத்தியோகத்தில் மேன்மையுண்டாகும். பணக் கஷ்டம் இருக்காது. முதலாளி – தொழிலாளி உறவு பாதிக்கப்படாமல் காப்பதில் இரு சாராருக்குமே பொறுப்புள்ள – நேரம் இது. உத்தியோக மேன்மையுண்டு. பதவி உயர்வு கிடைக்கும். தேவையான இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புண்டு.
தொழிலில் அபிவிருத்திகள் படிப்படியாக ஏற்படும். வியாபாரத்திற்காக புதிய இடம் வாங்குவீர்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். விவசாயிகளுக்கு வில்லங்கம் ஏதும் உருவாகாது. மகசூல் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த தொழில் செய்வோருக்கு லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு ஒரு சிறப்பு உண்டாகலாம். பொருளாதாரச் சிக்கல் வராது. தொழில் அபிவிருத்திகள் பாதிக்கப்படாது. மக்கள் சுபிட்சம் சீராக இருக்கும். கட்சிப் பணிகளில் சுறுசுறுப்பு ஏற்படும். பேசும் வார்த்தையில் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கலைத்துறைப் பணிகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். தொழில் சிறப்படையும். பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்படாது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களுடன் இணைந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இசை, எழுத்து ஆகிய துறைகளில் பணிபுரிபவர்கள் முன்னேற்றம் காண்பர்.
பெண்களின் பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப அமைதி கெடாது. வேலை செய்யும் பெண்களுக்கு மேன்மை உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு பணிகள் சுமாரான நிலையில் நடைபெறும். சில நன்மைகள் உண்டாகும். இதுவரை இருந்து வந்த உடல் உபாதை. உள்ளக்கோளாறு போன்ற குறைகள் நிவர்த்தியாக வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியம் ஏதேனும் நடக்கலாம்.
மாணவர்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பெரியோர் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள். நலம் விளையும். கல்விக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் பெறுவர். மருத்துவம், மேனேஜ்மெண்ட் துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு செல்வ நிலையில் எச்சரிக்கையோடு இருந்தால் எதையும் பறிபோகாமல் காத்துக்கொள்ளலாம். மிகுந்த உழைப்பு இருக்கும். வியாபாரிகளுக்கு, விவசாயிகளுக்கு உற்சாக நிலை உண்டு.
கலைத்துறையில் அன்றாட பணிகளுக்கு இடையூறு ஏற்படாது. குடும்ப நலம் உண்டு. அரசியல்வாதிகள் மக்கள் நலனில் அக்கறை காட்டுங்கள். நற்பணிகளில் ஈடுபடுங்கள். பேசும்போது அளந்து பேசினால் தொல்லை இல்லை. பெரியோர்களின் ஆசியை விரும்பிப் பெற்றால் பல விஷயங்களில் இழிவு உண்டாகாது தப்பிக்கலாம்.
திருவோணம்: இந்த ஆண்டு பொதுவாகச் சோதனை உண்டு. குடும்ப நலம் பாதிக்கப்படலாம். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் உண்டு. பெரியோர்களுக்கு மனவருத்தம் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரிகளுக்கு அளவான லாபம் தடைப்படாது. எந்த விதமான இடரையும் சமாளிப்பதோடு, கவுரவக் குறை உண்டாகாதபடியும் காக்கப்படுவீர்கள். கவலை வேண்டாம். விவசாயிகளுக்கு ஏற்றம் ஏற்படும். குடும்ப நலம் சீராக இருக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு அன்றாடப் பணிகள் செவ்வனே நடக்கும். ஆனால் மிகுந்த முயற்சியின் பேரிலேயே ஒவ்வொரு காரியத்தையும் முடிக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்குச் சங்கடம் வராது. விவசாயிகளுக்கு ஏற்றம் உண்டு.
கொடுக்கல்-வாங்கலில் அகலக்கால் வைக்க இது உகந்த நேரம் இல்லை. வீடு, நிலம் போன்றவற்றில் தகராறு இருந்தால் அதனைச் சமாதான முறையில் தீர்த்துக் கொள்ளுங்கள். பயன் தரும். கலைத்துறை பணிகள் சுறுசுறுப்படையும். குடும்ப நலம் சீராக இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – கும்பம் ராசியினருக்கு எப்படி?
கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு – சுக ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – பாக்கிய ஸ்தானத்தில் கேது – லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – விரைய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்கள்: சனியை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பொதுவாக தீமைகள் இருக்குமானாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது. சில நன்மைகள் சிறப்பாக உண்டாக வாய்ப்புண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல் நலம் பாதிக்கப்படலாம். குடும்ப நலம் பாதிக்காமல் இருக்க வாய்ப்புகள் அதிகம்.
நன்மைகளும் உண்டு; தீமைகளும் உண்டு. ஆனால் நன்மைகள் சற்றுத் தூக்கலாகவே நடக்க வாய்ப்புண்டு. பொருளாதார நிலையில் சரிவு ஏற்படாது. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்ப நலம் சீராக இருக்கும். உங்களுடைய கவுரவம் பாதிக்கப்படாமல் இருக்க இடமுண்டு. நல்லோர் ஆசியை விரும்பிப் பெறுங்கள்.
அன்றாடப் பணிகளுச்கு இடையூறு இருக்காது. ஏற்படும் கஷ்டங்கள் சற்று மட்டுப்பட வாய்ப்புண்டு. பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களுடைய சவுகரியமான வாழ்வுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்.
உத்தியோகத்தில் கெடுபிடி இருக்கலாம். மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் தொல்லை இல்லை. காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
அவசியமிருந்தாலன்றி பயணத்தை மேற்கொள்ள வேண்டாம். நன்மைகள் மிகுதியாக நடக்க வாய்ப்புண்டு. அவ்வப்போது சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். வியாபாரிகளுக்கு அளவான லாபம் வரும். தொழிலில் சிறு சிக்கல் ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம். வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்களுக்கு வீண் செலவுகள் உண்டாகலாம். பொருளாதார நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கவும் வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் அடக்கமாக நடந்து கொண்டு அவப்பெயர் வராமல் காத்துக் கொள்வது அவசியம். பெரியோர்களின் நல்லாசியைப் பெற்று வந்தால் நலம் விளையும். உடல் நலனில் அக்கறை இருக்கட்டும். முன்கோபம் காரணமாக சில நல்ல சந்தர்ப்பங்கள் பாழாகி விடுமாதலால் எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய கவுரவம் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு குடும்ப நலம், தாம்பத்யம் எல்லாம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரலாம். அதனால் சிறிதளவு பயனும் ஏற்படலாம். பொருளாதார நிலையில் தான் அவ்வப்போது இக்கட்டு உண்டாகும். காரியங்களில் வெற்றி வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
மாணவர்களுக்கு மதிப்பு கிட்டும். பொறியியல், விஞ்ஞானம், கணிதம் போன்ற இனங்களில் புதிய முயற்சி வேண்டாம். எனினும் உங்களுக்கான பாராட்டுகள் கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் இருக்கும். சித்த சுத்தியோடு செய்யப்படும் நற்காரியங்களினால் பலன் ஏற்படும். புகழும் உண்டாகும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த ஆண்டு உங்கள் பணிகள் பாதிக்கப்படாது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடந்து கொண்டால் வீண் தொல்லைகளைத் தடுக்கலாம். தொழில் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு.
தொழில் சிறக்கும். வியாபாரம் செழிக்கும். உங்களை வாழ வைக்கும் பொறுப்பை உங்களைச் சார்ந்த பெரியோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் மீது அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்ப நலம், தாம்பத்தியம் எல்லாம் சீராக இருக்கும். தகுதி வாய்ந்தவர்களுகளுக்குப் பதவி உயர்வு உண்டாகலாம்.
சதயம்: இந்த ஆண்டு உங்களுக்கு பெருந்தொல்லை ஏற்படாது. தொழில் சிறப்படையும். முதலாளி தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். எனினும் மனம் தளர வேண்டாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுமானாலும் அதற்காக மிகுந்த உழைப்பைச் செலுத்த வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம். எனினும் குடும்ப நலம் பாதிக்கப்படாது. விருந்தினர் வருகையும், விருந்தினராகச் செல்லக்கூடிய நிலையும் உண்டு. புத்திரர்களை முன்னிட்டுப் பெருமைப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஏற்படலாம்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த ஆண்டு பெருந்தொல்லை உண்டாக இடமில்லை. மனதிற்கு இனிமை தரும் சில நன்மைகள் நடக்கும். உங்களுடைய அந்தஸ்து பாதிக்கப்படாது. முழுமுயற்சியுடன் செய்யப்படும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலையில் அவ்வளவு சவுகரியத்தை எதிர்பார்ப்பதற்கில்லை.
தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகவே இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் தடைப்படாது. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். அரசியல்வாதிகள் கவுரவிக்கப்படுவார்கள். ஆன்றோர் நல்லாசி கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு
புத்தாண்டு ராசிபலன்கள் 2023 – மீனம் ராசியினருக்கு எப்படி?
மீனம் ( பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை – ராசியில் குரு – தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு – தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) – அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) – லாப ஸ்தானத்தில் சுக்கிரன், சனி என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றங்கள்: 29-03-2023 அன்று விரைய ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார் | 22-04-2023 அன்று குரு பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் | 08-10-2023 அன்று ராகு பகவான் ராசிக்கு மாறுகிறார் | 08-10-2023 அன்று கேது பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
பலன்கள்: குருவை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காதல் விவகாரங்களில் தீவிரம் ஏற்படுமானாலும் அதனைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. குடும்ப நலம் பாதிக்கப்படாது. சில நன்மைகள் உண்டாகும். பொதுவாக அந்தஸ்துக்கு ஊறு நேராது. முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
பிள்ளைகள் உங்கள் சொல்படி நடந்து கொள்வார்கள். படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். அன்றாடப் பணிகள் சரிவர நடக்கத் தடையில்லை. பொருளாதார நிலையில் சரிவும் உண்டு; சமாளிக்கக்கூடிய நிலையும் உண்டு. பல அரிய காரியங்களைச் செய்து பயனடையக்கூடிய வாய்ப்பும் உண்டு.
உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதனால் வேலைச் சூழல் நிம்மதியானதாக அமையும். சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு உங்களின் மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில் இருக்கும். சக தொழிளாலர்களின் ஆதரவு உங்களை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும். உயர் அதிகாரிகளும் உங்களிடம் நெருக்கத்துடன் பழகி உங்களை பாராட்டுவார்கள்.
தொழிலில் மிகுந்த அக்கறை செலுத்துங்கள். விவசாயிகளுக்குத் திருப்தியான சூழ்நிலை அமையும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி உண்டாகும். பொருளாதார நிலையில் கணிசமான வளர்ச்சியை நிச்சயம் காணலாம். தொழில் சிறப்படையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரக்கூடிய நல்ல நேரம் இது.
அரசியல்வாதிகள் தங்களுடைய வாழ்வு மேலும் மேலும் சிறப்படைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம். கட்சித் தலைமை உங்களுக்கு சில முக்கிய பொறுப்புகளைக் கொடுக்கும். அதை சிரத்தையுடன் செய்தால் உங்களுக்கான அங்கீகாரம் கட்சியில் கிடைக்க வாய்ப்புண்டு.
கலைத்துறைபணிகள் சரிவர நடக்கும். பலவிதமான நன்மைகள் உண்டாகக் கூடிய நல்ல நேரம் இது. நலம் பெருக வாய்ப்புண்டு. தொழில் சிறக்கும். உங்களை மிகவும் உயர்வான நிலைக்குக் கொண்டு செல்ல இந்த காலகட்டம் உதவும். கவுரவம் சிறப்பாக அமையும். புகழ், பொருள், எல்லாம் பெருகக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம். தரும காரியங்களில் ஈடுபட்டு வந்தால் நலம் பெருகும். மனநலம், குடும்பநலம் அதிகமாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவது அவசியம். தேவையான பணம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். சிலருக்கு அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாணவர்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பொறியியல் துறையில் சாதனை புரியலாம். மருத்துவம் படிக்கும் மாணவர்கள் புகழ் பெறுவார்கள். கணிதத்துறை மாணவர்கள் சிறந்து விளங்குவீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதை முறையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு குடும் நலம், மனநலம் இரண்டுமே சீராக அமையும். தகுதிவாய்ந்த அரசு அலுவலர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க இடமுண்டு. கலைத்துறை பணிகள் சிறப்படையும். குடும்ப நலம் பெருகும்.
ஏழைகளுக்கு உதவுங்கள், தெய்வப்பணிகளில் ஈடுபடுங்கள். கணிதத்துறை வல்லுநர்கள், மருத்துவத்துறை மேலோர்கள், விவசாயத்துறை விற்பனர்கள், வியாபாரத் துறை சமர்த்தர்கள் அனைவரும் பாராட்டு பெற வாய்ப்பு பெறுவீர்கள்.
உத்திரட்டாதி: இந்த ஆண்டு எல்லாம் விருத்தியாகும். தொழில் சிறப்படையும். முதலாளி – தொழிலாளி உறவு அன்புடன் விளங்கும். பணவரவு சீராக அமையும். வெளிப்படையாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டால் நலம் பெருகும்.
மற்றவர்கள் பாராட்டத்தக்க வகையில் உங்கள் வேலை அமைந்திருக்கும். வீரியமுடன் காரியங்ளைச் செய்வீர்கள். உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குழந்தைக்காக காத்திருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ரேவதி: இந்த ஆண்டு வீடு, மனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் சரியாகி புது வீடு கட்டுவீர்கள். பணப்பிரச்சினைகள் தீர்ந்து பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் திறமைகள் பல வழிகளிலும் வெளிப்படும்.
உங்கள் வேலை நுணுக்கத்தை கண்டு மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி சந்தோஷமான சூழல் உருவாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு.