19 வயதான மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் கெக்கிராவ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
சுகவீனமுற்றிருந்த சகோதரர்கள் இருவரை வைத்தியசாலைக்கு அழைத்துக் கொண்டு தாய் சென்றிருந்த நிலையில்,
வீட்டில் இருந்த தந்தையே இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் தலைக்கு எண்ணெய் தடவுமாறும் தந்தை தனது அவரது அறைக்கு அழைத்து முகத்தில் முத்தமிட்டதாகவும்
இதனை விரும்பாத தான் தப்பிக்க முயற்சித்தபோது தன்மீது தாக்குதல் நடத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனவும் குறித்த மாணவி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.