Home Local news 14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தாத்தா கைது!

14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தாத்தா கைது!

7

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தாத்தா முறையான ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஹீரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் பெற்றோர் ஹுரிகஸ்வெவ பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹுரிகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபரான 60 வயதுடைய தாத்தா முறையான ஒருவரை 03 ஆம் திகதி சனிக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Previous article14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் தாத்தா கைது!
Next articleஇன்றைய ராசிபலன் – 05/12/2022, கும்ப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்..