Home Local news வைத்தியசாலை விடுதிகளில் போதைமாத்திரை விற்பனை: வைத்தியசாலையின் பெண் சுகாதார உதவியாளர் கைது!

வைத்தியசாலை விடுதிகளில் போதைமாத்திரை விற்பனை: வைத்தியசாலையின் பெண் சுகாதார உதவியாளர் கைது!

10

கேகாலை பொது வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர் ஒருவர் நேற்று (11) வைத்தியசாலை விடுதியில் (வார்ட்) 2,000 ரூபாவுக்கு 173 போதை மாத்திரைகளை விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பரகம்மன நாமல் உயன பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரது மகனும் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை பொலிஸ் தலைமையகத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சம்பத் அபேவிக்ரமவின் பணிப்புரைக்கமைய இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அர்ஜுன விக்ரமசிங்க இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தார்.

Previous articleபிரதேச சபை சாரதியின் மீது வாள்வெட்டு
Next articleமூன்று வயது குழந்தையை கழுத்தை நெறித்து கொன்ற நபர் தற்கொலை